ஆனால் அதற்கான உண்மை பொருள் என்பது நம்மில் யாருக்கும் தெரியாது.
வடக்கில் தலை வைத்து படுக்கக் கூடாது ஏன்?
பூமிக்கு இரண்டு துருவங்கள் உண்டு. அவை வட துருவம் நேர் மின்னோட்டமும், தென் துருவம் எதிர் மின்னோட்டம் கொண்டது. இந்த மின்னோட்டம் வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கில் இருந்து வடக்கிற்கும் செல்லும்.
அதே போல் மனிதனின் தலை நேர் மின்னோட்டம் கொண்டது. கால் எதிர் மின்னோட்டம் கொண்டது.
நாம் தெற்கு பக்கம் தலை வைத்து, வடக்கு பக்கம் கால் நீட்டி படுக்கும் போது, பூமியின் நேர் மின்னோட்டம் மனிதனின் எதிர் மின்னோட்டத்துடன் இருக்கும். காந்தத்தின் இயல்புப்படி மின்னோட்டம் சீராக இருப்பதால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
அதுவே இம்முறையை மாற்றி செய்யும் போது, அது பல உடல் உபாதைகளை ஏற்படுத்தி விடும். எனவே தெற்கில் தலை வைத்து படுப்பது தான் நல்லது.
வாசலில் கால் நீட்டக் கூடாது ஏன்?
வீட்டு வாசல் என்பது மிகவும் புனிதமானது. அதனால் தான் வீட்டு வாசலின் முற்றத்தில் கோலம் போட்டு மாவிலை கட்டி புனிதப்படுத்துகிறார்கள்.
வீட்டு வாசல் அசுத்தமாகவும், கவனிப்பாரற்றும் இருக்குமாயின் வீட்டில் மகிழ்ச்சியையும், மங்களத்தையும் தரவல்ல சீதேவி வீட்டினுள் வர மாட்டாள்.
வீடும், அதன் வாசலும் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்போது தான் ஸ்ரீதேவி வீட்டிற்குள் குடியேறுவாள்.
எனவே நம் வீட்டிற்குள் ஸ்ரீதேவி வரும் வாசலை நோக்கி கால் நீட்டினால், அது ஸ்ரீதேவியை விரும்பவில்லை என்று பொருள்படும். அதனால் தான் வீட்டு வாசலில் கால் நீட்டி அமரக் கூடாது என்று கூறுகின்றனர்.
http://news.lankasri.com/lifestyle/03/129433?ref=right_related
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக