இராவணன் தொடர்பில் இலங்கையில் இல்லாத பல சாட்சிகள் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
இராவணன் வரலாறு தொடர்பில் இலங்கையிலுள்ள சில கடும்போக்குவாதிகள் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும், பிரித்தானியாவில் இதனை உறுதி செய்யும் வகையில் பல சாட்சிகள் கிடைத்துள்ளன.
இது தொடர்பிலான ஆதாரங்கள் பிரித்தானியாவின் பிலெக் பயர் வீதியில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இராவணன் தொடர்பான ஆவணங்கள் இலங்கையினுள் காணப்படுவதாக இராவணன் தொடர்பான ஆய்வாளர் மெரென்டோ அபேசேகர தெரிவித்துள்ளார்.
அதற்கமைய அரநாயக்க, அம்பலன்கந்தேயில் அவ்வாறான சாட்சிகள் காணப்படுவதாக கூறப்படுகின்றது.
எப்படியிருப்பினும் இவை அனைத்திற்குமான ஆதாரம் பிரித்தானியாவிலுள்ள அருங்காட்சியத்தில் உள்ள ஓலைச்சுவடி ஒன்றில் உள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த ஓலைச்சுவடி இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓலைச்சுவடி என கூறப்படுகின்றது.
பிரித்தானிய தகவல்களுக்கமைய 18ம் நூற்றாண்டில் இலங்கையில் தங்கியிருந்த இயுல் நெவில் என்ற சிவில் அதிகாரியினால் இவ்வாறான பல ஓலைச்சுவடிகள் பிரித்தானியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட ஓலைச்சுவடிகளுக்குள் முக்கர ஹட்டன என பிரபல ஓலைச்சுடியும் உள்ளடங்குகின்றன.
இலங்கையின் நீண்ட வரலாறு மற்றும் அபூர்வ தகவல்களின் இரகசியங்கள் உள்ளடங்கிய அந்த ஓலைச்சுவடிகளை மீளவும் இலங்கைக்கு கொண்டு வருவதற்கு ஒருவரும் முயற்சிக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை மெரென்டோ அபேசேகரவிடம் உள்ள ஓலைச்சுவடியில் இராவணனின் புதையல் மற்றும் ஆயுத களஞ்சிய அறை உள்ள இடம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரக்வான மலைப்பகுதி, ஓமாரகொல்ல மலை, நமுனுகல மலை ஆகிய இடங்களில் அவை உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்கள் லண்டனில் உள்ள பிலேக் பயர் அருங்காட்சியகத்தில் உள்ள ஓலைச்சுவடிகளில் மறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு பிரித்தானியாவில் உள்ள ஓலைச்சுவடிகளை படித்த வெளிநாட்டவர்கள் தொடர்ந்து இலங்கைக்கு வருவதற்கும் இது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கும் ஆர்வம் கொண்டுள்ளதாக மெரென்டோ அபேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/special/01/152473
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக