♥ நமது மூக்கினால் 50 ஆயிரம் விதமான வாசனைகளை நுகர முடியும். ஆனால் தூங்கும் போது நமது மூக்கினால் வாசனை பிடிக்க முடியாது.
♥நமது மூளை 80 சதவீதம் தண்ணீரால் ஆனது. பகலைவிட இரவில் மூளை சுறுசுறுப்பான இருக்கும். அதிகமாக சிந்தனைகள் தோன்றும். வலி என்ற உணர்வே மூளையின் உதவியால் தான் உணரப்படுகிறது. ஆனால் மூளையில் காயம்பட்டால் வலி தெரியாது.
♥சராசரி மனிதன் ஆண்டுக்கு ஆயிரத்து 460 கனவுகள் காண்கிறான். அதாவது தினமும் குறைந்தபட்சம் 4 கனவுகள்.
♥நாம் ஒரு அடியை எடுத்து வைக்கும் போது நமது உடலில் 200 தசைகள் செயல்படுகின்றன.
♥ நமது கண்விழியின் சராசரி எடை 28 கிராம் இருக்கும்.
♥ தும்மும் போது நமது கண்களை திறந்து வைத்திருக்க முடியாது. மூக்குத் துவாரங்களை மூடிக்கொண்டு முனக முடியாது.
♥ நம்மால் வாசனை பிடிக்க முடியாத நிலை அனோஸ்மியா எனப்படுகிறது. அதிகமாக வாசனை பிடிக்கும் சக்தியை ஹைபரோஸ்மியா என்கிறார்கள்.
♥நமது உடலில் 'உவுலா' என்ற உறுப்பு எங்கிருக்கிறது தெரியுமா? அடிநாக்கு பகுதியில் நாக்கின் மேற்புறம் காணப்படும் சிறுதசையே 'உவுலா' எனப்படுகிறது. நாம் இதனை உள்நாக்கு என்கிறோம். மனித உடலில் உள்ள உறுதியான தசை நமது நாக்குதான்.
♥பிறக்கும் போது நமது உடலில் 300 எலும்புகள் இருக்கின்றன. ஆனால் வளர்ச்சி அடைந்த மனித உடலில் 206 எலும்புகளே உள்ளன. பல எலும்புகள் ஒன்றிணைந்து விடுவது தான் இதற்கு காரணம்.
♥எலும்புகள் வலிமையானவை என்று எண்ணுகிறீர்களா? அதன் வெளிப்புறமே கடினமானது. உப்புறம் எலும்புகள் மென்மையாகத்தான் இருக்கும். ஏனெனில் எலும்புகள் 75 சதவீதம் தண்ணீரால் ஆனது. மனித எடையில் எலும்புகளின் பங்கு 14 சதவீதமாகும்.
♥நமது ரத்தம் தண்ணீரை விட 6 மடங்கு அடர்த்தியானது. பெண்களின் உடலில் 4.5 லிட்டர் ரத்தமும், ஆண்களின் உடலில் 5.6 லிட்டர் ரத்தமும் காணப்படுகிறது.
♥நமது உடலில் உள்ள ரத்த நாளங்களை ஒன்றிணைத்தால் 60 ஆயிரம் மைல்கள் நீளத்திற்கு இருக்கும்.
♥சிறுநீரகம் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை சுத்திகரிக்கிறது. தினமும் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது.
♥ஒவ்வொரு மனிதனின் கைரேகையைப் போலவே கால்ரேகை மற்றும் நாக்கு ரேகைகள் தனித்தன்மை வாய்ந்தவை. copy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக