தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 23 ஜூலை, 2017

இரண்டு நிமிடங்கள் உடலில் இதை மட்டும் பண்ணுங்க.. அதிசயத்தை உணருங்கள்!

நமது உடல் முழுக்க, முழுக்க இயற்கையாக உருவானது. இவ்வுடலுக்கு இயற்கையாக / செயற்கையாக எப்படி பாதிப்பு ஏற்பட்டாலும், அதற்கான தீர்வை அதுவே அதனுள் வைத்திருக்கிறது.
நமது உடலின் பல இடங்களில் நமது உடல் உறுப்புகளை, அதன் செயற்திறனை ஊக்குவிக்கும் புள்ளிகள் இருக்கின்றன
இந்த புள்ளகளை தூண்டிவிட்டு அதன் மூலம் தீர்வு காண்பதை தான் நாம் அக்குபஞ்சர் மருத்துவ முறை என்கிறோம். இதன் மூலம் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் பயிற்சி அளித்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.
இது முற்றிலும் செயற்கைத்தன்மை அற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், மார்பின் மைய புள்ளியில் இரண்டு நிமிடம் தேய்த்துப் பயற்சி செய்வதால் என்ன பயன் என்பது குறித்து இனிக் காணலாம்...
இதய நலன் சிலருக்கு சில சமயங்களில் இதயம் படபடவென்று அடிப்பது போல ஓர் உணர்வு ஏற்படும். மேலும், இதை மாரடைப்பு என எண்ணியும் அவர்கள் அஞ்சுவது உண்டு. ஆனால், இது போன்ற உணர்வு ஏற்படுவது இதயம் துடித்தல் (Heart Palpitation) / நெஞ்சு துடித்தல் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பதட்டம் பெரும்பாலும் அதிகமாக மன அழுத்தத்துடன் காணப்படுபவர்கள். எதற்கெடுத்தாலும் பதட்டப்படுபவர்கள் மத்தியில் இது போன்ற உணர்வு அதிகமாக ஏற்படுகிறது.
இதனால், இவர்கள் அதிகளவில் நரம்பியல் சார்ந்தும், பதட்டம் சார்ந்தும் பாதிக்கப்படுகிறார்கள். தீர்வு! இதுப் போன்ற உணர்வு அதிகமாக ஏற்படுபவர்கள், இதை மிக எளிய அக்குபஞ்சர் வழியில் தீர்வுக் காணலாம்.
இதன் மூலம் உடல் முழுதிலுமான இரத்த ஓட்டம் சீராகி, உடற்திறன் மேம்படும். அமைதி! மார்பின் நடுவில் இருக்கும் இந்த புள்ளியில் அக்குபஞ்சர் பயிற்சி மூலமாக தூண்டுவதால் பதட்டம் குறையும், நரம்பு மண்டலம் வலுமையடையும், இதய கோளாறுகள் குறையும்.
இந்த புள்ளி, நடு இதய எலும்பின் கீழ் பாகத்தில் மூன்று கட்டைவிரல் அகல அளவில் அமைந்துள்ளது.
எப்படி செய்வது?
இந்த புள்ளியை தூண்டிவிட, இந்த புள்ளியில் 1-2 நிமிடங்கள் வரை விரல்கள் கொண்டு தேய்த்துக்கொடுக்க வேண்டும்.
மேலும், இந்த 1-2 நிமிடங்கள் நீங்கள் இழுத்து ஆழமாக, நிதானமாக மூச்சு விட வேண்டும். ஒரே மாதிரியாக மூச்சுவிட வேண்டும்.
நன்மைகள்!
இவ்வாவறு இந்த பயிற்சியில் ஈடுபடுவதால், இதய அழுத்தம், உணர்வு சமநிலை, நரம்பு மண்டலம், பதட்டம், மன அழுத்தம் போன்றவற்றை கட்டுக்குள் வைக்கலாம்.
மேலும், இது ஆஸ்துமா, இருமல், மார்பக தொல்லைகளுக்கும் நல்ல தீர்வளிக்கிறது. குறிப்பு! இந்த பயிற்சியை நீங்கள் தினமும் கூட செய்துவரலாம்.


இது இரத்த ஓட்டத்தை உடல் முழுவதும் சீராக்குவதால், மற்ற உடல் பாகங்களின் செயற்திறனும், ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

http://www.manithan.com/fitness/04/133041?ref=builderslide

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக