தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, July 4, 2017

மகேஸ்வர் நகரம் மற்றும் கோட்டை மகிழ்மதி !

மத்தியபிரதேச மாநிலத்தின் கார்கோன் மாவட்டத்தில் பிரம்மாண்டமான கோட்டை ஒன்று அமைந்துள்ளது.
மிகவும் அழகாகவும், சிறப்பாகவும் கட்டப்பட்டுள்ள இந்த கோட்டை ரியல் மகிழ்மதி என அழைக்கப்படுகிறது.
நர்மதா ஆற்றுப்படுகையில் அதிக நிலப்பரப்பை கொண்டு அமைந்துள்ள இந்த மகேஸ்வர் நகரம் மற்றும் கோட்டை 1818-ம் ஆண்டுகளில் மரத்தார் அரசர்களின் கோட்டையாக இருந்தது.
இந்த கோட்டையை மையமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த அரசன் சகஸ்ரார்ஜூன், 500 மனைவிகளை கொண்டு அமோக வாழ்க்கை வாழ்ந்து வந்தாராம்.
இந்த மகேஸ்வர் நகரத்தில் 24,000 பேர் வாழ்ந்து வருகின்றனர். அங்கு வாழும் மக்கள் அனைவரும் 5-ம் நூற்றாண்டிலிருந்தே கைத்தறி தொழில் செய்து வருகின்றனர்.
இங்கு திருவிழாக்கள் என்றால் இந்த நகரம் மட்டுமில்லாது, மாநிலம் முழுவதுமே கொண்டாட்டத்தால், நிறைந்து காணப்படும்.
அதிலும் நாக பஞ்சமி, குடி படவா, தீஸ், மகாசிவராத்திரி, சமோதி அமாவாசை முதலிய பண்டிகைகள் பெரும்பாலும் சிறப்பாக கொண்டாடப்படுமாம்.
http://news.lankasri.com/travel/03/128128?ref=lankasritop

No comments:

Post a Comment