மஞ்சள் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்?
- நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, சளி, இருமல், மூச்சுப் பிரச்சனை மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்ற தொற்று நோய்களின் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.
- மஞ்சள் சீரண சக்தியை அதிகரித்து, வயிறு வீக்கம், வாய்வு, நெஞ்செரிச்சல், கொழுப்பை கரைத்தல் போன்ற பிரச்சனையில் இருந்து விடுபட நல்ல நிவாரணியாக செயல்படுகிறது.
- மஞ்சளில் உள்ள குர்குமின் எனும் பொருள் கல்லீரல் ஈரல் அழற்சி மற்றும் கொழுப்பு கல்லீரல் நோய் போன்ற பிரச்சனையை குணமாக்கி, கல்லீரல் மற்றும் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.
- மஞ்சள் ஜூஸானது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சருமத்தில் ஏற்படும் கோடுகள், முதுமை தோற்றம், தழும்புகள் மற்றும் சரும வெடிப்புகளை மறைத்து முகத்தை பளிச்சென்று மாற்றுகிறது.
- உடல் உறுப்புகள் மற்றும் திசுக்களுக்கு எதிராக செயல்படும் தனிச்சை நோயெதிர்ப்பு நோய்கள் வராமல் மஞ்சள் தடுக்கிறது. எனவே தினமும் ஒரு டம்ளர் மஞ்சள் ஜூஸ் குடித்து வருவது மிகவும் நல்லது.
http://news.lankasri.com/health/03/129470
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக