புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேகநபரான சுவிஸ்குமாரை யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமைப் பொலிஸ் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவித்தபோதும் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் மறுப்புத் தெரிவித்தார்.
சுவிஸ்குமாருக்கு எதிராக சாட்சிகள் இல்லை என்றும், அதனால் அவரை யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமைப் பொலிஸ் அலுவலகத்தில் ஒப்படைக்க முடியாது. விடுவிக்க வேண்டும் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் தெரிவித்தார்.
இவ்வாறு சம்பவம் நடைபெற்றபோது பதவியில் இருந்த யாழ்ப்பாண மூத்த பொலிஸ் அத்தியட்சகர் சாட்சியம் வழங்கினார்.
புங்குதீவு மாணவி கொலை வழக்குத் தொடர்பான தீர்ப்பாயத்தில் இன்று சாட்சியப் பதிவுகள் நடைபெற்று வருகின்றன. அதில் சாட்சியமளித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சம்பவ தினத்தன்று சந்தேகநபரான சுவிஸ்குமாரை புங்குடுதீவில் கைது செய்து உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் என்னிடம் அழைத்து வந்தார். அவரை யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கூறினேன்.
அதற்கு மறுப்புத் தெரிவித்த உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் சுவிஸ்குமார் என்பவருக்கு எதிராக சாட்சிகள் இல்லை என்றும், சம்பவம் தொடர்பாக விசாரணை செய்யும் ஊர்காவற்றுறை உதவிப் பொலிஸ் பரிசோதகர் டிரான் சாட்சிகள் இல்லை என்று தெரிவித்தார் என்றும் அவரை யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் அலுவலகத்தில் ஒப்படைக்க முடியாது என்றும் கூறினார்.
சாட்சிகள் இல்லாவிட்டாலும் சந்தேகத்தின்பேரில் யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கூறினேன். அதற்கும் அவர் மறுப்புத் தெரிவித்தார்.
யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் தொடர்பு கொண்டேன். அவர் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜனைத் தன்னிடம் அனுப்புமாறு தெரிவித்தார்.
அவரிடமும் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் மேற்கண்டவாறே தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வட மாகாண மூத்த பொலிஸ் மா அத்தியட்சகருடன் தொடர்பு கொண்டுள்ளார். வட மாகாண மூத்த பொலிஸ் மா அதிபர் சுவிஸ்குமாருக்கு காயங்கள் ஏதாவது இருக்கின்றதா என்று ஆராய்ந்து வைத்திய அறிக்கை வழங்க வேண்டுமானால் வழங்கி அவர் வெளியேற அனுமதிக்குமாறு யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு கூறியுள்ளார் என்று சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/04/132326
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக