அந்த வகையில் உலகில் உள்ள தீவுகளில் மனிதர்கள் வாழாத தெய்வீக தன்மையுடைய தீவு ஒன்றும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இயற்கை அழகை கொண்ட, கடலால் சூழப்பட்ட 8 கோவில்களை கொண்ட ஒரு குட்டி தீவு இந்தோனேசியாவில் உள்ளது.
இந்தோனேசியா பாலித் தீவிற்கு அண்மையில் “மெஞ்சாங்கன்” எனும் சிறிய தீவாக அமைந்துள்ளது.
இந்த தீவினை ‘கணேஷர் தீவு’ என்று கூறுவர். இந்த பெயர் வர காரணம் குறித்த தீவில் பெரிய விநாயகர் திருக்கோயில் அமையபெற்றுள்ளது.
இந்தோனேசியாவின் சுமார் 2000 ஆண்டுகள் மிகவும் பழைமை வாய்ந்த இந்துக் கோவில்களில் ஒன்றான இந்த கோவில் அமைகின்றது.
இந்தத் தீவில் 8 கோவில்கள் உள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் மிகவும் புகழ்பெற்ற ஆலயமாக சேகர கிரி தர்ம காஞ்சன ஆலயம் காணப்படுகின்றது.
தற்பொழுது இந்த தீவில் மனிதர்கள் வாழவில்லை என்றாலும் தினந்தோறும் இந்து மக்கள் இந்த கோவிலுக்கு சென்று வழிப்பட்டு வருகின்றனர்.
இந்த தீவில் உள்ள ஒவ்வொரு கோவிலும் மிகவும் சக்தி வாய்த ஆலயமாக நம்பப்படுகின்றது.
பல பயங்கர எரிமலை தாக்குதல்கள் மற்றும் நிலநடுக்கங்கள் ஆகியவற்றையும் மீறி இந்த கோவில்கள் நிலைத்து நிற்கின்றன.
தீவிற்கு அண்மையில் ‘லெத்கொல் விஸ்ணு’ எனப்படும் ஒரு விமான நிலையமும் அமைய பெற்றுள்ளது.
இந்த கோவிலின் சிற்பங்களும் பல அரிய பொக்கிஷங்களும் கடலுக்குள் மூழ்கி காணப்படுகின்றன. இவை அனைத்தும் ‘அண்டர்வாட்டர் டெம்பல்’ என பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது.
கடல் நீர்மட்ட உயர்வால் இந்த தீவின் கரையோர பகுதிகளில் இருந்த ஒரு சில கோவில்கள் தற்போது நீருக்குள் மூழ்கி விட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும், தீவின் கோவில்களில் இந்து தர்மத்தைச் சார்ந்த பெரிய சிலைகளும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/special/01/151393
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக