தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 18 ஜூலை, 2017

ஒரு மணி நேரத்திற்கு 2 முறை சிறுநீர் கழிக்கிறீர்களா? இது உங்களுக்கு தான்

ஒரு மணி நேரத்திற்கு 2 முறைகள் சிறுநீர் கழித்தல் அல்லது அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஏற்பட்டால், அது அவர்களின் உடலில் ஏதோவொரு பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்.
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனைக்கு காரணம் என்ன?
  • உடலில் அளவுக்கு அதிகமாக குளுக்கோஸ் இருந்தால், அதனை வெளியேற்றுவதற்கு சிறுநீரகத்தின் செயல்பாடு அதிகரிக்கும். இது நீரிழிவு நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்.
  • மன அழுத்தம் அதிகமாக இருந்தால், ஒருவித பதட்ட உணர்வு ஏற்படுவதுடன், மைய நரம்பு மண்டலம் சிறுநீர்ப்பையில் ஒருவித தூண்டலை ஏற்படுத்தி, அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.
  • உடலில் தைராய்டு பிரச்சனை இருந்தால், அதனால் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனைகள் உண்டாகும்.
  • சிறுநீரகப் பாதையில் ஏதேனும் நோய்த்தொற்றுக்கள் இருந்தாலும், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை ஏற்படும்.
  • நம் உடலில் கால்சியம் சத்துக்கள் அதிகரித்து விட்டால், அது சிறுநீரகத்தில் தேங்கும். அதனால் சிறுநீரின் அளவு குறைந்து, அடிக்கடி சிறுநீரை வெளியேற்ற நேரிடும்.
  • சிறுநீரகத்துடன் நரம்பு தொடர்புடையதால், நரம்பு பக்கவாதம் பிரச்சனை இருந்தால், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை ஏற்படும்.
  • ஆல்கஹாலில் பீரை அதிகமாக குடிப்பதால், சிறுநீர் அடிக்கடி வெளியேறும். ஏனெனில் ஆல்கஹால் உள்ள DNH எனும் அமிலம் வெளியீட்டின் போது இடையூறை ஏற்படுத்தி, அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வை உண்டாக்கும்.
  • பெண்களின் உடலிலேயே மிகப் பெரிய ஹார்மோன் மாற்றங்கள் நிகழும் போது, அதாவது இறுதி மாதவிடாயின் அறிகுறியாக, அடிக்கடி சிறுநீர் வெளியேற்றம் உண்டாகும்.
  • கர்ப்பிணி பெண்களின் கருப்பையில் உள்ள குழந்தை வளர்வதால், சிறுநீர்ப்பையின் அழுத்தம் அதிகரித்து, அடிக்கடி சிறுநீரானது வெளியேறும்.
http://news.lankasri.com/disease/03/128990

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக