இப்படி, சோழர்கள் காலத்தில், திப்பு சுல்தான் காலத்தில் நாம் இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்பதையும் நாம் கற்பனை செய்திருக்கலாம்.
ஒருவேளை நாம் நல்ல அரசர்களைப் பற்றியே சிந்தித்து கொண்டிருக்கிறோமோ.... 60 மனைவிகளையும் ஒரே இடத்தில் கொடூரமாக கொன்ற ஈவு இரக்கமற்ற அரசன் ஒருவனை பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா?
கர்நாடக மாநில வரலாற்றில் இப்படி ஒரு நிகழ்வு கொடூர சம்பவம் நிகழ்ந்தது கிடையாதாம். அந்த அளவுக்கு கொடுமையான ஒரு நிகழ்வின் அடையாளம் தான் சாத் கபாரில் உள்ள நினைவுச் சின்னங்கள். 1659ம் ஆண்டு தற்போதைய கர்நாடக மாநிலத்தில் உள்ள பிஜாப்பூரில் நிகழ்ந்தது இந்த கொடூரம்.
அந்த காலத்தில் சத்ரபதி சிவாஜி பெயரை கேட்டாலே மக்கள் பயந்து நடுங்குவார்களாம். அவர் படையெடுத்து வந்தால் நிச்சயம் அவருக்குத்தான் வெற்றி என்று பேசிக்கொண்டுள்ளார்கள்.
இதனால் இஸ்லாமிய அரசர்களுள் சிலர் இவர்மீது பொறாமை கொண்டிருந்தனர். எனினும் அவரை வெற்றிக் கொல்ல முடியாது என்று நினைத்துக் கொண்டனர்.
அதிலும் ஒரு அரசன் சிவாஜியை எதிர்க்கத் துணிந்தான். யார் யாரோ சொல்லியும் கேட்காத அப்சல்கான் சிவாஜியுடன் போருக்கு தயாரானான்.
போர் சிவாஜி அல்லது அப்சல் கானுக்கு எமனாக வரும் என நினைத்தால் உண்மையில் இதனால் பேராபத்துக்குள்ளானது அப்சல் கானின் மனைவிகள்தான்
அப்சல் கான் கொடூர முறையில் கொலை செய்த அவனது மனைவிகள் அனைவரும் மிகவும் அப்பாவிகள். அவர்களின் சாவு நெருங்குவதைக் கண்டும் அவர்கள் கண்கலங்கவில்லை.
ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கைக் கொண்டிருந்த அப்சல்கான் அதை நம்பியே எல்லா வேலைகளையும் செய்து வந்தான்.
போர் காலம் நெருங்கும் முன் ஜோதிடரை அழைத்து இந்த போரில் யார் வெற்றிபெறுவார் என கேட்டான் அப்சல் கான். அதில் என்ன நடந்தது தெரியுமா?
இந்த முடிவைக் கேட்டது அப்சல் கானின் உலகமே இருண்டது. ஆம். சிவாஜியை எதிர்த்து போரிட்டால் அப்சல்கான் உயிரிழக்க நேரிடும் என ஜோதிடர் கூறியுள்ளார்.
போர் சூழல் நெருங்க நெருங்க என்ன நடக்கப் போகிறது என்று அப்சல் கானுக்கு ஒரே பதற்றம்.
அப்சல் கான் தான் ஒருவேளை இறந்துவிட்டால், தன் மனைவியர்களை வேறுயாரும் திருமணம் செய்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். இதனால் அந்த கொடூர முடிவை எடுத்தான்
அந்த 60 பேரையும் ஓரிடத்துக்கு அழைத்தான். அங்கு சுற்றிலும் படை சூழ 60 பேரும் வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு என்ன நடக்கப்போகிறது என்றுகூட தெரியாது.
60 பேரும் வந்தனரா என்பதை உறுதி செய்து கொண்டு, அவர்களை கொல்ல படையினருக்கு உத்தரவிட்டான். அதுவும் கொடூரமான முறையில்....
60 பேரில் படையிலிருந்தும் தப்பி சென்ற இரண்டு பேரை கண்டு பிடித்து அவர்களையும் கொன்றான் அந்த கொடூரன்
அவர்கள் இறந்துவிட்டனரா என்பதை பரிசோதித்து பின், அவர்களின் உடல்களை 60 கல்லறைகளில் புதைத்தான்.
அந்த கல்லறைகள் இருக்கும் இடம் சாத் கபார் என்று அழைக்கப்படுகிறது. இது அப்சல்கான் மற்றும் அவனது அப்பாவி 60 மனைவியர்களின் கல்லறைகளை கொண்டுள்ளது.
இந்த சாத் கபார் ஒரு சுற்றுலா பிரதேசம் இங்குள்ள கல்லறைகளை உலகெங்கிலுமிருந்து வரும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு செல்கின்றனர்.
பின்னர் போருக்கு சென்ற அவனது படைகள் தோல்வியுற்றது. இதனால் சிவாஜியின் கையால் அப்சல்கான் கொல்லப்பட்டான். ஜோதிடர் சொன்னபடியே, நவம்பர் 10ம் தேதி கொல்லப்பட்டான் அப்சல் கான்.
http://www.manithan.com/events/04/131541
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக