கரித்தூள் என்றால் என்ன?
கரிமச்சத்து நிறைந்த பொருட்களான தேங்காய் உமி, கரி, தென்னை, மரக்கட்டை. லிக்னைட், மரவீடு மற்றும் பெட்ரோல் ஆகியவை மூலம் பிரித்தெடுக்கும் வேதி மற்றும் இயற்பியல் மாற்றம் போன்றவற்றின் மூலம் இந்த கரித்தூள் கிடைக்கிறது.
இதை செயலாக்கப்பட்ட கரித்தூள் என்று கூறுவார்கள். இந்த கரித்தூளில் நிறைய துளைகள் நிறைந்துள்ளதால், நம் பற்களின் இடுக்குகளில் உள்ள கறையை அகற்றி, பற்களில் உள்ள அழுக்கு, தகடுகள் மற்றும் மஞ்சள் படலம் போன்றவற்றை வெளியேற்றுகிறது.
ஆனால் இந்த கரித்தூள் பற்சொத்தை, பல் அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு பயன்படாது.
கரித்தூள் டூத் பேஸ்ட் தயாரிப்பது எப்படி?
கரித்தூள் மாத்திரையை மருந்து கடையில் வாங்கி, அதில் ஒரு மாத்திரையை மட்டும் எடுத்து, அதை தண்ணீருடன் கலந்து நன்றாக பேஸ்ட் செய்துக் கொள்ள வேண்டும்
பின் தினமும் அதை கொண்டு பற்களை துலக்கி விட்டு வாயை நீரில் கொப்பளிக்க வேண்டும்.
கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்புகள்
- கரித்தூளை கொண்டு பற்களை தேய்க்கும் போது, விழுங்கி விடக் கூடாது.
- கரித்தூள் மாத்திரைகளை வாங்கும் போது, அதனுடைய காலாவதி திகதியை பார்த்து வாங்குவதுடன், அந்த திகதி முடிவதற்குள் பயன்படுத்துவது மிக அவசியம்.
- கரித்தூள் கொண்டு பற்களை துலக்குவதால், ஏதேனும் பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டால், அதை நிறுத்தி விட வேண்டும்.
- முன்னதாகவே வாய் மற்றும் பற்களில் ஏதேனும் ஒரு பிரச்சனை இருந்தால், இந்த முறையை பின்பற்றக் கூடாது.
- பிரஷ் அல்லது கைகளை பயன்படுத்தி இந்த முறையை பின்பற்றலாம். ஆனால் கரித்தூளை நீண்ட நேரம் பற்களில் தேய்க்க கூடாது.
- கரிதூளை கொண்டு ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே பற்களை துலக்க வேண்டும்.
- கரித்தூள் பேஸ்ட்டை முன்னதாக தயாரித்து விட்டு, பிறகு பயன்படுத்த வேண்டும் என்றால், அதை காற்று புகாத பாக்ஸில் அடைத்து வைக்க வேண்டும்.
http://news.lankasri.com/beauty/03/127951?ref=lankasritop
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக