தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, July 4, 2017

புதிய வகை உயிரினம்: 9 வயது தமிழக(தமிழ்?!!அடிமை!!) சிறுவன் சாதனை!!

தமிழகத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் நன்னீரில் வாழும் புதிய வகை உயிரினமான ஜெல்லி பிஷ் என்ற மீனை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
வேலூரைச் சேர்ந்தவர் இஷான் அப்ரஹாம் பிச்சமுத்து(9), நான்காம் வகுப்பு படித்து வரும் இவர், கடந்த வருடம் தனது குடும்பத்தினருடன் கொடைக்கானல் சென்றுள்ளார்.
அப்போது அங்குள்ள ஏரியில் தண்ணீரின் பத்து அடிக்கு கீழே ஜெல்லி பிஷ் இருப்பதை கண்டுள்ளார். இதை அவரது தந்தை கிஷோர் பிச்சைமுத்து அறிய வகை மீன் என்று கூறியுள்ளார்.
இதனால் இருவரும் அந்த மீனை தங்களுடன் கொண்டு வந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தேசிய கடல்சார் மேலாண்மை மையத்திற்கும், வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக்கல்லூரிக்கும், ஜெல்லி பிஷ்ஷை அவர்கள் சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
சுமார் ஆறு மாத காலம் நடந்த சோதனைக்கு பின்னர். இஷான் கண்டறிந்த ஜெல்லி பிஷ் மீன் இந்தியாவின் முதன் முதலில் கண்டறியப்பட்ட மீன் என்று தெரியவந்துள்ளது.
இதுகுறித்து இந்திய உயிரினங்கள் கணக்கெடுப்பு துறையின் முன்னாள் இயக்குநர் வெங்கட்ராமன் கூறுகையில், இந்த வகை மீன்கள் மிகவும் அரிதானவை என்றும், இது இந்தியாவில் கண்டறியப்பட்ட ஜெல்லி பிஷ் இனம் எனவும் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து குறித்த மீன் கடந்த பிப்ரவரி மாதம் இந்திய உயிரினங்கள் கணக்கெடுப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://news.lankasri.com/science/03/128076

No comments:

Post a Comment