தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, July 20, 2017

இந்தியாவின் பிரம்மாண்ட சுற்றுலாத் தளங்கள்: எங்கெல்லாம் உள்ளது?

நாட்டை ஆள்வதற்கும், போர் புரிவதற்கும் வல்லமை மிகுந்த சில அரசர்கள் கட்டிய பிரம்மாண்டமான சுற்றுலாத் தளங்களை பற்றி காண்போம்.
மைசூர்
பல ஆண்டுகளுக்கு முன் கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் சாம்ராஜ்யத்தை நான்காம் கிருஷ்ணராஜ உடையார் எனும் அரசர் ஆண்டு வந்தார்.
இவர் தனது பாதுகாவலர்களை வெயிலிலிருந்து பாதுகாக்க, 1916-ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட 4 லட்சம் யூரோக்கள் மதிப்புள்ள ரோல்ஸ் ராயல்ஸ் எனும் காரை வாங்கியுள்ளார்.
அந்த காலத்தில் உலகின் மிகப் பெரிய பணக்காரராக திகழ்ந்த அரசர் கிருஷ்ணராஜாவின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 35 பில்லியன் யூரோக்கள்.
பெங்களூர்
பெங்களூர் அரண்மனை என்று அழைக்கப்படும் பூங்கா பெங்களூரின் மையத்தில, சதாசிவ நகருக்கும் ஜயமஹாலுக்கும் இடையில் அமைந்துள்ளது.
குஜராத்
நவாப் ஜூனகர்க் எனும் அரசர், மிக உயர்ந்த 800 நாய்களை வளர்த்த வளர்த்து வந்துள்ளார். ஒவ்வொரு நாய்க்கும் தனியாக வேலைக்காரர்களை நியமித்திருந்தார்.
இந்த அரசர் அந்த காலத்தில் இரண்டு நாய்களுக்கு 30 லட்சம் செலவு செய்து ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்தாராம்.
ஹைதராபாத்
ஐதராபாத் நிசாம் உஸ்மான் அலி, உலகின் மிக அதிக மதிப்புள்ள வைரத்தை பேப்பர் வெயிட்டாக பயன்படுத்தினாராம். இந்த வைரத்தின் மதிப்பு 5 மில்லியன் யூரோக்களாம்.
பிரம்மாண்ட அழகினை கொண்ட ஃபலக்னுமா எனும் பேலஸ் ஒரு ஆங்கிலேய கட்டிடக்கலை நிபுணரால் வடிவமைக்கப்பட்டது. இதன் கட்டுமானம் 1884-ம் ஆண்டில் துவங்கப்பட்டது.
ராஜஸ்தான்
ராஜஸ்தானில் உள்ள கோட்டை மிகச்சிறந்த சுற்றுலா தளமாகும். படிகங்கள் மீது அதிக ஆவல் கொண்ட உதய்ப்பூர் அரச குடும்பம், அரண்மனையில் உள்ள மேஜைகள், நாற்காலிகள் மற்றும் உணவுக்கூடங்கள் என்று அரண்மனை முழுவதும் படிகங்களை நிரப்பி அலங்கரித்துள்ளனர்.
உதய்ப்பூர்
அழகிய வடிவமைப்புகளை கொண்ட உதய்ப்பூர் சிட்டி மாளிகை எனும் கோட்டை சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.
இந்தூர்
இந்தூர் லால் பாக் எனும் கோட்டையின் முற்வாசல் கதவு லண்டனில் வடிவமைக்கப்பட்டதாகும்.
http://news.lankasri.com/travel/03/129057

No comments:

Post a Comment