தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 20 ஜூலை, 2017

நீங்கள் அமரும் நிலையை வைத்து உங்க பர்சனாலிட்டி எப்படினு தெரிஞ்சுக்கலாம்! (படம் இணைப்பு )

முதல் நிலையில் அமருபவர்களின் சிந்தனையானது, பூனை தன் கண்களை மூடிக்கொண்டால் உலகமே இருண்டு விடும் என்று நினைப்பது போல இருக்கும். ஆனால் சில சமயங்களில் இவர்கள் நினைத்தது போலவே சில விஷயங்கள் நடந்துவிடும்.

அதை நினைத்து இவர்கள் மகிழ்ச்சியடைவார்கள், சில சமயம் இப்படியாகிவிட்டதே என்று வருத்தமடைவார்கள்.

இவர்களிடன் எளிமையாக பழகிவிடலாம். குழந்தை தனம் கொஞ்சம் இருக்கும், அழகாக இருப்பார்கள், கிரியேட்டிவான சிந்தனை படைத்தவர்கள்.

இவ்வாறு அமர்பவர்கள் நிறைய கனவுகளை கொண்டிருப்பார்கள். கற்பனை திறனில் சிறந்து விளங்குவார்கள். நண்பர் கூட்டத்தில் இவர்கள் ஒரு முக்கிய நபராக இருப்பார்கள், புதுப்புது விஷயமாக யோசித்து செய்து கொண்டே இருப்பார்கள்.

இவர்களுக்கு ஊரை சுத்திக்கொண்டே இருப்பது என்றால் மிகவும் பிடிக்கும், இதன் மூலம் நிறைய நண்பர்களை உருவாக்கிக்கொள்வார்கள். இவர்கள் வாழ்க்கை துணை, வேலை, ஊர், மாநிலம், தோற்றம் என எதையும் எளிதில் மாற்றும் தன்மை கொண்டவர்கள். முன் யோசனை அதிகம் இல்லாமலேயே பல புது விஷயங்களை செய்து விடுவார்கள்.

இவர்கள் சௌகரியமாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள், வார இறுதி நாட்களை மால்கள் அல்லது தங்களை அழகாக மாற்றிக்கொள்ள பயன்படுத்தமாட்டார்கள், ஆனால் ஒரு வாசனை திரவியம் அல்லது க்ரீம்களை தேர்ந்தெடுக்க ஒருநாளையே செலவிடுவார்கள்.

இவர்களால் நீண்ட நேரம் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த முடியாது. இவர்களால் முக்கியமான விஷயம் எது என அறிந்து அதில் கவனம் செலுத்த முடியாது.

இவர்கள் தாங்களும் கால தாமதம் செய்யமாட்டார்கள், மற்றவர்கள் செய்வதையும் விரும்பமாட்டார்கள். இவர்கள் திறமைசாலிகள், அறிவானவர்கள் மற்றும் இளகிய மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் இயற்கையிலேயே சுத்தமானவர்களாக இருப்பார்கள்.

இவர்கள், பொது இடங்களில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதை விரும்பமாட்டார்கள், உதரணமாக, முத்தமிடுவது, அழுவது போன்றவற்றை விரும்பமாட்டார்கள்.

இவர்கள் திருமணத்திற்கு அவசரப்படமாட்டார்கள், முதலில் கல்வி, அடுத்த நல்ல வேலை என அனைத்திற்கும் உரிய நேரம் ஒதுக்குவார்கள். தங்களது இலட்சியங்களை அடைவதில் உறுதியாக இருப்பார்கள்.

நினைத்ததை அடையும் வரை இவர்களுக்கு தூக்கமே வராது. தன்னை விட யாராலும் இதை இவ்வளவு சிறப்பாக செய்ய முடியாது என நினைப்பார்கள். இருப்பினும் ஒரு சிறிய பாதுகாப்பற்ற மனநிலை இவர்களுக்குள் இருக்கும்.
20 Jul 2017
http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1500538326&archive=&start_from=&ucat=1&

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக