உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை வெட்டி, அதை கருமை உள்ள இடங்களில் 5-10 நிமிடம் மசாஜ் செய்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
இம்முறையை தினமும் இரண்டு முறை செய்து வந்தால், விரைவில் கருமை நீங்கும்.
எலுமிச்சை
எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து அதை பஞ்சில் நனைத்து, கருமை உள்ள இடத்தில் தேய்த்து, 5 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும். இதனால் கருமை மறையும்.
தயிர்
தயிர், மஞ்சள்தூள், தேன் மற்றும் சிறிது எலுமிச்சைச் சாறு ஆகிய அனைத்தையும் கலந்து, அதை கருமை உள்ள இடத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, அந்த பேஸ்ட்டை கருமை உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, பின் கழுவி, உலர வைக்க வேண்டும்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயை வெட்டி கருமை உள்ள இடங்களில் தடவி உலர வைக்கலாம் அல்லது வெள்ளரிக்காய் சாற்றில் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் தூள் கலந்து, அதை தடவி உலர வைத்தும் கழுவலாம்.
ஆரஞ்சு தோல்
ஆரஞ்சு பழத்தின் தோலை உலர வைத்து பொடி செய்து, அதனுடன் பால் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட் செய்து, அதை கருமை உள்ள இடத்தில் தடவி, 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
http://news.lankasri.com/beauty/03/128062
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக