குதிகால் வெடிப்பை போக்கும் தீர்வுகள்
- ஒரு டம்ளர் இளஞ்சூடான நீரில் 2 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, வெடிப்பு உள்ள குதிகாலை அதில் ஊறவைத்து, 15 நிமிடங்கள் கழித்து காலை எடுக்க வேண்டும்.
- விட்டமின் E உள்ள எண்ணெயில் கால்களில் தடவி கொள்ள வேண்டும். 400 மில்லிகிராம் வைட்டமின் E எண்ணெய் சேர வேண்டியது அவசியம். அதன் பின் நல்ல சுத்தமான பழைய சாக்ஸ் அணிந்து இரவு முழுவதும் கால்களை ஓய்வில் விட வேண்டும்.
- 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 1/2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகிய இரண்டையும் கலந்து அதை குதிகாலில் தூங்கும் முன் தேய்த்து கொண்டு சாக்ஸ் அல்லது ப்ளாஸ்டிக் பேக்கை இரு கால்களிலும் அணிந்து, காலையில் கழுவ வேண்டும்.
- 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் எடுத்து கொதிக்க விடாமல் மிதமாக சூடுபடுத்தி, அதில் கால்களை ஊறவைக்க வேண்டும். இதை தொடர்ந்து ஒரு வாரம் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.
- நன்றாக பழுத்த வாழைப்பழத்தை மசித்து, அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் பால் க்ரீமை சேர்த்து நன்றாக கலந்து குதிக்கால் வெடிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால் வெடிப்புகள் மறையும்.
http://news.lankasri.com/beauty/03/128986?ref=right_featured
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக