எண்ணெய் வடியும் முகம் என்றால் அழகுபடுத்துவதில் சிரமம் இருக்கிறது.
ஏனெனில், எண்ணெய்தன்மை கொண்ட சருமத்திற்கு ஏற்றவாறு அழகுகுறிப்புகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒரு டிஷ்யூ பேப்பரை வைத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் சுற்றி அழுத்தித் தேய்க்க வேண்டும்.
ஆலிவ் எண்ணெயைக் குழைத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி மெதுவாக மசாஜ் செய்து நன்றாக ஊறியதும் கழுவ வேண்டும்.
ஆப்பிள் பழத்தை மைய குழைத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி மசாஜ் செய்தபின் கழுவ வேண்டும்.
இதே போல் வெந்தயத்தை மைய அரைத்தும் மசாஜ் செய்யலாம்.
பாலடையுடன் கொஞ்சம் எலுமிச்சம் பழச்சாறை குழைத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி மெதுவாக மசாஜ் செய்து நன்றாக ஊறியதும் கழுவ வேண்டும்.
எலுமிச்சம்பழத்தை பாதியாக வெட்டி அதன் சாற்றை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி மெதுவாக மசாஜ் செய்து நன்றாக ஊறியதும் கழுவ வேண்டும்.
ஒரு ஸ்பூன் வேக வைத்த ஓட்ஸ் கஞ்சி, ஒரு ஸ்பூன் பால், ஒரு துளிகள் எலுமிச்சைப் பழச்சாறு மூன்றையும் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி மெதுவாக மசாஜ் செய்து நன்றாக ஊறியதும் கழுவி வர, எண்ணெய் வழிதல் மட்டுமல்லாமல் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.
|
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
செவ்வாய், 1 செப்டம்பர், 2015
முகத்தில் எண்ணெய் வடிகிறதா? இதோ டிப்ஸ்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக