தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 15 ஜூன், 2015

அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயில் (திருக்கச்சூர்)


அருள்மிகு கச்சபேஸ்வரர் திருத்தலம் திருக்கச்சூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது. சுந்தரரால் தேவாரத்திருப்பதிகம் பெற்ற திருத்தலமாகும். இங்கு இறைவன் சுயம்பு லிங்கமாக இருந்து அருள் புரிகிறார். இத்தலத்து இறைவனை வழிபட்டு விட்டு மதிய உணவு வருவதற்குத் தாமதமானதால் பசியோடுக் காத்திருந்தார் சுந்தரர். அடியவரின் பசியைப் போக்க இறைவன் அந்தணர் வடிவம் தாங்கி அவ்வூரிலுள்ள பக்தர்களின் வீடுகளில் உணவுகளைப் பெற்று வந்து சுந்தரரின் பசியைப் போக்கினார்.

இத்தலத்தில் சுந்தரர் பாடியத் தேவாரத்திருப்பதிகம்:

முதுவாய் ஓரி கதற முதுகாட்
டெரிகொண்டாடல் முயல்வானே
மதுவார் கொன்றைப் புதுவீ சூடும்
மலையான் மகள்தன் மணவாளா
கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்
கண்டால் அடியார் கவலாரே
அதுவே ஆமாறிதுவோ கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே

இறுதிப் பாடலில்:

அன்னம் மன்னும் வயல்சூழ் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானை
உன்ன முன்னும் மனத்தாரூரன்
ஆரூரன்பேர் முடிவைத்த
மன்னு புலவன் வயல் நாவலர்கோன்
செஞ்சொல் நாவன் வன்றொண்டன்
பன்னு தமிழ்நூல் மாலை வல்லார்
அவரெந் தலைமேற் பயில்வாரே.

சுந்தரர் இப்பதிகத்தை முடிப்பதற்கு முன் “அவரெந் தலைமேற் பயில்வாரே” என்று கூறுகிறார். அதாவது நாள்தோறும் எம்பிரான் சிவபெருமானின் திருவைந்தெழுத்தை தியானிப்பவர்களுக்குப் பிறவிப் பிணியற்று சிவலோகத்தில் அமர்வர் என்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக