தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 26 ஜூன், 2015

ஜேர்மனி பெண்களின் ‘தாய்ப்பால்’ பாதுகாப்பானது அல்ல: ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஜேர்மனி நாட்டில் அண்மையில் குழந்தை பெற்றுள்ள பெண்களின் ‘தாய்ப்பாலை’ ஆய்வுக்கு உட்படுத்தி பரிசோதனை செய்ததில், அவற்றில் புற்றுநோயை உருவாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜேர்மனியில் உள்ள வெவ்வேறு மாகாணங்களில் வசித்து வரும் 16 பெண்களிடம் தாய்ப்பால் சேகரிக்கப்பட்டு அதனை அண்மையில் பரிசோதனை செய்துள்ளனர்.
இந்த ஆய்வு முடிவில், தாய்ப்பாலில் Glyphosate என்ற வேதி பொருள் ஒரு மில்லி லிட்டருக்கு 0.210 முதல் 0.432 நானோ கிராம் வரை உள்ளதை ஆய்வாளரகள் கண்டுபிடித்துள்ளனர்.
சாதாரண தண்ணீரில் 0.100 என்ற வீதத்தில் இருந்தால் தான் இந்த வேதி பொருள் ஆபத்தை விளைவிக்காது. இந்த அளவிற்கும் மேலாக தாய்ப்பாலில் வேதி பொருள் கலந்திருப்பது ஆய்வாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த பரிசோதனை முடிவுகளை Oldenburg பல்கலைகழகத்தை சேர்ந்த Irene Witte என்பவரிடம் விளக்கியபோது, இந்த அளவிற்கு தாய்ப்பாலில் வேதி பொருள் கலந்து இருப்பது மிகவும் ஆபத்தானது.
அதே சமயம், 16 பெண்களிடம் மட்டுமே இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளதால், உடனடியாக இந்த விவகாரத்தில் ஒரு முடிவுக்கு வர முடியாது.
தாய்ப்பால கொடுக்கும் பல பெண்களிடம் அடுத்தடுத்த பரிசோதனைகளை நடத்திய பின்னரே உறுதியான முடிவை கூற முடியும்.
இருப்பினும், சமீபத்தில் சர்வதேச சுகாதர அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில், Glyphosate என்ற வேதிப்பொருள் புற்று நோயை உருவாக்கும் தன்மை படைத்தது என கூறியுள்ளதால் இந்த விவகாரம் தொடர்பாக விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாதுகாப்பு அற்ற தாய்ப்பால் குறித்தான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஜேர்மனியின் கிரீன் கட்சி, இந்த விவகாரம் தொடர்பாக தீவிரமான நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும் என அக்கட்சியின் தலைவர்கள் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக