தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 25 ஜூன், 2015

பான்கார்ஹ் கோட்டை


பான்கார்ஹ் கோட்டை ராஜஸ்தானில் மலை சூழ்ந்த பகுதியில் பான்கார்ஹ் என்ற இடத்தில் இருக்கிறது.
இந்த பாழடைந்த ஊர் ஜெர்ப்பூர் மற்றும் ஆல்வார் இடையில் சரிஸ்கா புலிகளின் சரணாலயத்தை ஒட்டி உள்ளது. இந்த கோட்டையின் அமைப்பு, அது அமைந்திருக்கும் இடம் ஆகியவை சுற்றுலா பயணிகளை எளிதில் ஈர்த்துள்ளது.
இந்த கோட்டை உலகின் பயங்கரமான இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அதன் காரணமாகவே சுற்றுலா பயணிகள் அதிகமாக இங்கு படையெடுக்கின்றனர். இந்த பயங்கர கோட்டையை 1613ம் ஆண்டு மன்னன் மடோ சிங் கட்டினார்.
இதை பேய்களின் கோட்டை என்றும் அழைப்பர். இதன் கட்டமைப்பு காரணமாக இதில் பலரின் ஆவிகளும் வலம் வருவதாக கூறப்படுகிறது. மேலும், இரவு நேரங்களில் உள்ளே சென்றால் உயிருடன் யாரும் திரும்ப மாட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த கோட்டையில் பேய்கள் நடமாட்டம் இருப்பதாக வெளியிடப்பட்ட வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. இதற்கு பல்வேறு கட்டுக்கதைகள் இருக்கின்றன. ஆனால் இவை எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை.இந்த கோட்டையின் இளவரசி ரத்னாவதியை அந்த பகுதியில் இருந்த ஒரு மந்திரவாதி அபகரிக்க நினைத்தான். ஆனால் அவனுடைய பல திட்டங்களும் எடுபடவில்லை.
https://youtu.be/tvOm5C37d-s
இந்நிலையில் இளவரசியின் வேலைக்காரியை வேறு வேடத்தில் வெளியில் சந்தித்த அந்த மந்திரவாதி, தான் மாந்தீரகம் செய்து வைத்திருந்த எண்ணெய்யை அவளிடம் ஒரு வழியாக விற்றுவிட்டான். அந்த எண்ணெய்யை இளவரசி தொட்டுவிட்டால் நேராக வந்து அவளே மந்திரவாதியிடம் சரணடைவார் என்று நினைத்திருந்தான்.
ஆனால் மந்திரவாதியின் திட்டம் இளவரசிக்கு தெரியவர, அவர் அந்த எண்ணெயை அவர் கீழே கொட்டிவிட்டார். அந்த மாந்திரீக எண்ணெய் அந்த மந்திரவாதியையே பழிவாங்கிவிட்டது.
இதனால் அந்த மந்திரவாதி அந்த கோட்டையை சபித்துவிட்டு இறந்துவிட்டான். இதனால் அங்கு உள்ளவர்கள் இறந்துவிட்டதாகவும், அவர்கள் அங்கு ஆவியாக அலைவதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பல்வேறு ஆராய்சிகளையும் இந்திய தொல்பொருள் ஆராய்சி அமைப்பு நடத்தியது. அவர்களது அறிவிப்பு பலகைகளையும் அங்கு காணமுடியும். அதில் மறைமுகமாக பல்வேறு வாசகங்கள் இடம்பெற்றிருக்கும்.
சூரிய வெளிச்சத்திற்கு முன்னதாக, சூரிய வெளிச்சத்திற்கு பிறகு அங்கு செல்வது தடை செய்யப்பட்டது என்ற குறிப்புகள் அதில் அடங்கி இருக்கும்.
இதை மீறி செல்பவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவர். இதில் அடங்கி இருக்கும் மர்மங்கள் காரணமாகவே இது போன்ற எச்சரிக்கைகளை சுற்றுலா பயணிகளுக்கு தொல்பொருள் ஆராய்சி அமைப்பு கொடுக்கிறது.
ஆசிய கண்டத்தில் மிகவும் அழகாக, ஆபத்தான இடங்களில் இது ஒன்றாக இருப்பதால் எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் இங்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகளும் அதிகம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக