தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 21 ஜூன், 2015

கொழுப்பை கரைக்க உதவும் ஆரோக்கிய பானங்கள்!


நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவராக இருந்தால், உங்கள் டயட்டில் ஒருசில பானங்களை சேர்த்து வாருங்கள். இந்த பானங்கள் உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையை விரைவில் குறைக்க உதவும். இப்போது அந்த பானங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில் தண்ணீர் உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைத்து, உடல் வறட்சியைத் தடுத்து, மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். மேலும் ஆய்வு ஒன்றில் தினமும் 8 டம்ளருக்கு மேல் தண்ணீர் குடிப்பவர்களின் உடலில் கலோரிகளானது, குறைவான அளவில் தண்ணீர் குடிப்பவரை விட அதிக அளவில் கரைவதாக தெரியவந்துள்ளது.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காய்கறி ஜூஸ் அதிகளவில் குடிக்கலாம். எவ்வளவு தான் காய்கறி ஜூஸ் சுவையாக இல்லாவிட்டாலும், அன்றாடம் ஏதேனும் ஒரு காய்கறியைக் கொண்டு ஜூஸ் செய்து குடித்தால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதோடு, கொழுப்புக்கள் கரைத்து வெளியேற்றப்படும்.

க்ரீன் டீயில் இரத்தத்தை சுத்தப்படுத்தும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிக அளவில் உள்ளது. மேலும் இது பால் சேர்க்காமல் குடிக்கப்படுவதால், உடலில் கொழுப்புக்கள் சேர்வது குறையும். மேலும் க்ரீன் டீயை தொடர்ந்து அன்றாடம் ஒரு கப் குடித்து வந்தால், அது புற்றுநோய் வரும் வாய்ப்பை தடுப்பதோடு, முகத்தை பொலிவோடும், உடலை சிக்கென்றும் வைத்துக் கொள்ள உதவும். மேலும் ஆய்வு ஒன்றில் தினமும் 3-5 கப் க்ரீன் டீ குடித்தால், அது உடலில் உள்ள கலோரிகளை 35-43 சதவீதம் கரைக்கும் என்று தெரியவந்துள்ளது.

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை ஜூஸ் செய்து, அதில் தேன் சேர்த்து அன்றாடம் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகமாகி, உடல் எடையை விரைவில் குறைக்கும்.
http://www.visarnews.com/2015/06/blog-post_191.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக