அல்ஸீமர் நோய் என்பது தன்னை அறியாது, நிலை மறந்து பயணிப்பதாகும்.
இவ்வாறு தன்னை மறந்து பயணிக்கும் நோயாளி தொடர்பில் தகவல் தெரிவிக்கக்கூடிய சாதனம் ஒன்றினை 16 வயதான அமெரிக்காவைச் சேர்ந்த உயர் கல்லூரி மாணவனான Kenneth Shinozuka என்பவர் உருவாக்கியுள்ளார்.
தனது பாட்டனாரும் இதே நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களே இச் சாதனத்தை உருவாக்க தூண்டியதாக குறித்த மாணவன் தெரிவித்துள்ளான்.
Safe Wander எனும் இச்சாதனமானது சிறிய நாணயத்தின் அளவை ஒத்ததாக இருப்பதுடன், அதன் அடிப்பகுதியில் சென்சார் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.
இதனை நோயாளியின் பாதத்தின் அடிப்பகுதியில் அல்லது காலுறையினுள் பொருத்துவதன் மூலம் அவரின் அசைவுகள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக