மாஸ் கிரகத்தில் "பிரமிட்" இருக்கும் அதிர்ச்சி தரும் புகைப்படம் ஒன்றை ,தற்போது வெளியிட்டுள்ளது அமெரிக்க விண்வெளி நிலையமான நாசா. சர்சைக்குரிய இந்த புகைப்படத்தில் பிரமிட் போன்ற அமைப்புடைய கல் ஒன்று காணப்படுகிறது. அதுவும் மிகவும் நேர்த்தியாக அது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இக் கிரகத்தில் முன்னர் மனிதர்கள் அல்லது வேற்று கிரக வாசிகள் வாழ்ந்திருக்கவேண்டும் என்று உறுதியாக சொல்லப்படுகிறது. பல பில்லியன் ஆண்டுகளுக்கு பின்னர் , அக்கிரகத்தில் அனைத்து உயிரினங்களும் அழிந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் நாசா அனுப்பிய வின்கலத்தில் இருந்த , இயந்திரக் கார் மாஸ் கிரகத்தில் தரையிறங்கியது யாவரும் அறிந்ததே.
குறித்த ரோபோ கார் எடுத்த புகைப்படத்தையே நீங்கள் தற்போது பார்கிறீர்கள்.
செவ்வாய் கிரகத்தில் பிரமிட் போன்ற அமைப்பு? பண்டைய எகிப்து நாகரீகத்தினர் வாழ்ந்து இருக்கலாம்!ஆய்வாளர்கள் தகவல்.
வேற்று கிரகவாசிகள் குறித்து ஏதாவது செய்தி அடிக்கடி வந்து கொண்டுதான் இருக்கிறது. பூமியில் மட்டும் அல்ல மனிதன் ஆர்வம் காட்டி வரும் செவ்வாய் கிரகத்திலும் வேற்று கிரகவாசிகள் இருப்பதாக செய்திகள் வெளிவருவது உண்டு.
பூமியில் இருந்து 57 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது குறித்து ஆராய நாசா சார்பில் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.அது தொடர்ந்து செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை அனுப்பி வருகிறது.
சமீபத்தில் அது அனுப்பிய புகைப்படம் ஒன்றில் பாறைகளுக்கு இடையே எகிப்தில் இருப்பதை போன்ற பிரமிட் போன்ற தோற்றமுடைய ஒரு அமைப்பு இருந்து உள்ளது.
இது குறித்து வேற்று கிரக உயிரினங்கள் குறித்து ஆய்வு செய்துவரும் ஆய்வாளர்கள் கூறும் போது பண்டைய நாகரிகத்தினர் கட்டிடிய பிரமிடைப்போல அது மிகவும் நேர்த்தியாக கட்டபட்டு உள்ளது. அது ஒளியின் தந்திரமாக தெரியவில்லை ஒரு அறிவார்ந்த கட்டிடமாக உள்ளது.இந்த பிரமிடு கார் அளவில் உள்ளது.ஆனால் பெரிய அமைப்பு முறை செவ்வாய்யின் நிலப்பரப்புக்கு அடியில் இருக்கலாம்.இதனால் பண்டைய எகிப்து நாகரிகத்தினர் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்து இருக்க கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இது குறித்து யுடியூப் சேனலில் பரனார்மல்குருசிமிள் (ParanormalCrucible) இது குறித்த வீடியோவை வெளியிட்டு உள்ளது.இந்த புகைப்படம் ரோவரால் மே 7 ந்தேதி எடுக்கபட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக