ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெயிடு நகரைச்சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் மிகவும் இறுக்கமாக ஜீன்ஸ் அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் அண்மையில் அவரின் முழங்காலுக்கு கீழ் உள்ள பகுதியானது பெரிதாக வீங்கி, நரம்புகள் அனைத்தும் அடுத்தடுத்து என்று சுருங்கி, கடுமையான அவஸ்தைக்கு ஆளாகியுள்ளார். அதனால் எழுந்து நடமாட முடியாத நிலையில் இருந்துள்ளார்.
இறுக்கமான ஜீன்ஸ் அணிந்த அந்தப் பெண், தனது பயண முடிவில் வாகனத்தில் இருந்து இறங்கியுள்ளார். அப்போது அவருடைய அடிக்கால் பகுதி பெரியதாக வீங்கியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அவரால் முடியவில்லை. அவர் அணிந்திருந்த ஜீன்ஸை வெட்டி எடுக்காமல், அதனை கழட்டமுடியாத நிலையில் தவித்துள்ளார்.
மேலும் முழங்கால் மற்றும் கால் பகுதிகளை அசைக்க முடியாமல் அவதிப்பட்ட அவரை, உறவினர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். உடனடியாக அந்தப் பெண் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருடைய தசைப்பகுதி பாதிக்கப்பட்டு விட்டது என்றும், காலின் கீழ்ப் பகுதியில் நரம்புகள் ஒன்றாக இணைந்துவிட்டன என்றும் கூறி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.
பின்னர் 4 நாட்கள் மருத்துவமனையில் நரம்பியல் சிகிச்சை பெற்றுவந்த அவர், பின்னர் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இப்போது அவர் யாருடைய உதவியும் இன்றி நடந்து வருகிறார்.
இது தொடர்பாக அவருக்கு சிகிச்சை அளித்த நரம்பியல் வல்லுநர் கிம்பர் கூறுகையில்,
” பெண்கள் நீண்ட நேரம் இதுபோன்ற இறுக்கமான ஜீன்ஸ்களை அணிவதைத் தவிர்க்க வேண்டும் .நீண்ட நேரமாக இதனை அணிவது என்பது உடல் நலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும்” என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
” பெண்கள் நீண்ட நேரம் இதுபோன்ற இறுக்கமான ஜீன்ஸ்களை அணிவதைத் தவிர்க்க வேண்டும் .நீண்ட நேரமாக இதனை அணிவது என்பது உடல் நலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும்” என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக