சுவிட்சர்லாந்து நாட்டில் 14ம் நூற்றாண்டை சேர்ந்த கலைப்பொருட்களை சுவிஸ் தொல்பொருள் துறை நிபுணர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.
சுவிஸின் Schwyz மற்றும் Zug மண்டலங்களுக்கு உட்பட்ட எல்லைப்பகுதிகளில் நடத்திய ஆய்வில் வரலாற்று சிறப்புமிக்க நாணயங்கள், கத்திகள், படை வீரர்கள் பயன்படுத்திய தூண்டு கோல்கள் உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சுவிஸ் வரலாற்றில் சிறப்புமிக்கதாக கருதப்படும் 700 வருடங்களுக்கு முன்னர் ஆஸ்திரியா படைகளுடன் நடைபெற்ற Morgarten என்ற போர்ப்பகுதியில் இருந்து இந்த கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள 12 சில்வர் நாணயங்கள் 1275ம் ஆண்டிலிருந்து 14ம் நூற்றாண்டு வரை புழக்கத்திலிருந்த நாணயங்கள் என தெரிய வந்துள்ளது.
நாணயங்கள் மட்டுமில்லாமல், 14ம் நூற்றாண்டில் படை வீரர்கள் பயன்படுத்திய போர் ஆயுதங்களான உறை கத்திகள், குத்தீட்டிகள் உள்ளிட்டவைகளும் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இவற்றில் பிற வகை இரண்டு கத்திகள் மற்றும் குதிரைகளுக்கு பயன்படுத்திய லாடங்கள் எந்த நூற்றாண்டை சேர்ந்தவை என்ற தகவல் இன்னும் கிடைக்கவில்லை.
இது குறித்து பேசிய தொல்பொருள் துறை அதிகாரியான Stefan Hochuli, இந்த கண்டுபிடிப்பு தனது இதயத்துடிப்பை அதிகரித்து உள்ளது எனவும், சுவிஸின் இந்த பகுதியிலேயே கிடைத்த முதல் புராண கலைப்பொருள்கள் என்பதால், இவற்றை ஆராய்ந்தால் 14 நூற்றாண்டு தொடர்பான சுவிஸ் வரலாறு கூடுதலாக தெரிய வரும் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக