"மஸ்ரூம் புலாவ்"- தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி, புதினா, வெள்ளரிக்காய், பச்சைமிளகாய், வெங்காயம், இஞ்சி, தக்காளி, காளான், கருவேப்பிலை, இஞ்சி பூண்டு பேஸ்ட், பால், தயிர், எலுமிச்சை பழம், நெய், எண்ணெய், உப்பு.
"மஸ்ரூம் புலாவ்" - செய்முறை
1. முதலில் புதினா, எலுமிச்சை பழம்,வெள்ளரிக்காய், பச்சைமிளகாய், வெங்காயம், இஞ்சி, தக்காளி, கருவேப்பிலையை நறுக்கிக் கொள்ளவும்.
2. கடாயில் எண்ணெய் இட்டு பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு பொன்நிறம் வரும் வரை வதக்கவும்.
3. பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி தக்காளி, சிறிது உப்பு சேர்த்து, நன்றாக வதக்கவும். பின் நறுக்கி வைத்துள்ள காளான் சேர்த்து எலுமிச்சை பழ சாறு பிளிந்து அதில் பால் சிறிது தயிர் ஊற்றி, புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலக்கவும்.
4.பின் பாசுமதி அரிசியை அதில் சேர்த்து அதை குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணிர் ஊற்றி சிறிது நெய் இட்டு குக்கரில் 20நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
இப்பொழுது சுவையான "மஸ்ரூம் புலாவ்" ரெடி
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக