கூகுள் நிறுவனமானது முன்னணி இணைய சேவையை வழங்கிவருவதற்கு அப்பால் தானியங்கி கார்கள், ஸ்மார்ட் கன்டாக்ட் லென்ஸ், பலூன்கள் மூலமான இணைய இணைப்பு என பல்வேறு புதிய திட்டங்களை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் Hoverboard எனும் இயந்திரத்தினையும் விசேட தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய சுயமாக வடிவமைக்க திட்டமிட்டிருந்த தகவல் வெளியாகியுள்ளது.
சினிமாக்களில் மட்டுமே அதிகளவில் பயன்படுத்தப்படும் இதனை தற்போது Lexus எனும் நிறுவனமே வடிவமைத்துவருகின்றது.
ஆனால் கூகுள் நிறுவனம் சந்தைப்படுத்தும் நோக்கத்துடன் சில மேம்படுத்தல்களை மேற்கொண்டு தயாரிக்க திட்டமிட்டிருந்த நிலையில் குறித்த திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக