கைப்பேசி உற்பத்தியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்ற அதே சமயத்தில் ஒவ்வொரு நிறுவனங்களும் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி வருகின்றன.
இதற்கிணங்க Bas van Abel எனும் நிறுவனம் பயனர்களால் திருத்தங்கள் மற்றும் மேம்படுத்தல்களைச் செய்யக்கூடிய புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைத்துள்ளது.
FairPhone எனும் இக்கைப்பேசி Tantalum, வெள்ளீயம், தங்குதன் மற்றும் தங்கம் என்பவற்றினைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இது அப்பிள் மற்றும் சம்சுங் தயாரிப்புகளுக்கு இணையானதாக வடிவமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
இதேவேளை இந்த நிறுவனம் கடந்த இரண்டு வருடங்களில் 60,000 ஸ்மார்ட் கைப்பேசிகளை விற்பனை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக