தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 21 ஜூன், 2015

ஆரோக்கியத்தைத் தரும் கம்பு கூழ்



அக்காலத்தில் எல்லாம் காலை உணவாக தானியங்களைத் தான் அதிகம் உட்கொண்டு வந்தார்கள். அதனால் தான் அவர்கள் நீண்ட நாட்கள் எவ்வித நோயும் தாக்காமல் ஆரோக்கியமாக இருந்தனர். எனவே நீங்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், காலையில் தானியங்களை சேர்த்து வாருங்கள். அதிலும் தானியங்களில் ஒன்றான கம்புவை கூழ் செய்து குடித்து வருவது, உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது, சத்தானது.

இங்கு அந்த கம்பு கூழ் எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:

கம்பு மாவு - 1 கப்
சாதம் ஊற வைத்த தண்ணீர் - தேவையான அளவு
சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
மோர் - 1 கப்
சாதம் - 1 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் சாதம் ஊற வைத்த நீரில் கம்பு மாவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கரைத்து, 6-8 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்ரை அடுப்பில் வைத்து, அதில் கரைத்து வைத்துள்ள கம்பு நீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, அடிப்பிடிக்காமல் தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

அப்படி கிளறும் போது கலவையானது களி போன்று வரும் போது, அதனை இறக்கி வேறு பாத்திரத்தில் போட்டு நன்கு குளிர வைக்க வேண்டும்.

இறுதியில் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், மோர் மற்றம் சாதம் சேர்த்து நன்கு கரைத்தால், கம்பு கூழ் ரெடி!!!

குறிப்பு:

இதனை மண் பாத்திரத்தில் கரைத்து குடித்தால், இதன் சுவை இன்னும் அருமையாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக