=======June 28 2015========= 08 -56 PM==========
அன்புடையவரே வணக்கம் இந்த உலகம் துன்பமும் துயரமும் அடைவதற்கு முக்கிய காரணம் உயிரைக் கொன்று தினபது தான் என்பது உண்மையாகும், தினமும் தின்னால் சீக்கிரம் அழிந்திடுவான்.ஒரு உயிரை உண்டாக்குவதற்கு முடியாததை அழிக்க யாருக்கும் உரிமை இல்லை எனபதே இயற்கையின் கட்டளையாகும் ,அதாவது கடவுளின் சட்டமாகும்
எவ்வளவு செல்வம் இருந்தாலும் பட்டம் பதவிகள்,புகழ் இருந்தாலும்.அவனுக்கும் தம் உயிர்மேல் அளவுகடந்த ஆசை வருகிறது.உயிரைக் காப்பாற்ற எவை எவை இருந்தாலும் அத்தனையும் இழக்க தயாராகிறான்.அந்த உயிரின் பெருமையும் மகத்துவத்தையும் எப்படி சொல்லமுடியும்.உயிர் இருக்கும் வரைதான் அவன் மனிதன்.உயிர் போய் விட்டால் அவன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும்,அந்த உடலுக்கு பிணம என்று பெயராகும் .
அதேபோல் ஒரு உயிரை அழித்தால்,அந்த உயிர்போன பிறகு அதற்கு பெயர் பிணம என்பதாகும் ,மனிதன் இறந்தால் சுடுகாட்டில் பிதைக்கிறோம்.வாயில்லாத ஆடு மாடு,கோழி ,பன்றி ,போன்ற ஜீவன்கள் இறந்தால் மனிதன் வயிற்றில் பிதைக்கிறோம் .மனிதன் வயிறும் சுடுகாடுதான் என்பதை உணரவேண்டும்.சுடுகாட்டில் எண்ண இருக்கும்.அங்கு யார் வாழ்வார் .என்பதை நினைத்து பாருங்கள் ,மனிதன் மனிதனாக வாழவேண்டுமானால்.தாவர உணவுதான் சிறந்ததாகும்.
ஆனால் இதை வள்ளலார் 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே தெளிவாக விளக்கியுள்ளார் .திருவள்ளுவரும் 2000,ஆண்டுகளுக்கு முன்னாடியே தெரியப்படுத்தி யுள்ளார்.மனிதன் இதையெல்லாம் அறிந்து புரிந்து கொள்ளாமல் மனம் போனபடி வாழ்ந்து கொண்டு இருக்கிறான்
வள்ளலார் பாடல் வருமாறு '-
நலிதரு சிறிய தெய்வம் என்று ஐயோ
நாட்டிலே பலபெயர் நாட்டிப்
பளிதர ஆடு பன்றிக் ,குக்குடங்கள்(கோழி )
பலிகடா முதலிய உயிரைப்
போலியுறக் கொண்டே போகவுங் கண்டே
பந்தி நொந்து உளம நடுக் குற்றேன்
கலியுறு சிறிய தெய்வ வேங்கோயில்
கண்டகாலத்தும் பயந்தேன் .
இப்படி பலபாடல்கள் திரு அருட்பாவில் பதிவு செய்துள்ளார்கள் .
திருவள்ளுவர் திருக்குறளில் இரண்டு அதிகாரம் கொல்லாமை புலால் மறுத்தல் பற்றி மிகவும் தெளிவாக எழுதி வைத்துள்ளார்
தன்ஊன் பெருக்கற்கு பிருதூன் உண்பான்
எங்கணும் ஆளும் அருள் .
கொல்லான் புலால் மறுத்தானை எல்லா
உயிர்களும் கை கூப்பி தொழும் .
என்கிறார் திருவள்ளுவர் இவைபோல் இருபது குறள்கள் உள்ளன.இதையெல்லாம் ஏன் எழுதி வைத்துள்ளார்கள் என்பதை மனிதர்கள் சற்று சிந்தித்து பார்க்கவேண்டாமா ?
உலகிலேயே பெரிய குற்றம் எதுவென்றால் பிற உயிர்களை கொலை செய்வதும்,அதனுடைய புலாலை (மாமிசம் ) உண்பதும் என்பதை அனைவரும் உணரவேண்டும்..இவைகளுக்கு கடவுளிடம் மன்னிப்பு கிடையாது .
நம்முடைய குழந்தைக்கு உடலில் எதாவது ஒரு கீறல் பட்டால் எவ்வளவு துடி துடிக்கிறோம்.அதுபோல் வாயில்லாத ஜீவனை கத்தியை வைத்து அறுக்கின்ற போது அந்த ஜீவன் எவ்வளவு துன்பப்படும் என்பதை உணராமல் அதை வெட்டி கூறு போட்டு தின்கிறோமே,இவை எந்த விதத்தில் ஞாயம் .
மனிதனை மனிதன் கொலை செய்தால் தூக்கு தண்டனை என்கிறது உலகியல் சட்டம்.வாயில்லாத உயிர்களை கொலை செய்தால் அதற்கு உங்கள் சட்டத்தில் என்ன தண்டனை?அனைவரும் சேர்ந்து உண்பதுதான் உங்கள் சட்டத்தின் தீர்ப்பு.ஆண்டவன் தீர்ப்பு எண்ண தெரியுமா ?நீங்கள் பல பிறவிகள் எடுத்து துன்பப்பட்டுக் கொண்டே இருக்கவேண்டும்.உங்கள் வாழ்க்கையில் நிம்மதி மகிழ்ச்சி என்பது இறுதிவரைக் கிடையாது .
மனிதப்பிறவி எடுத்ததின் நோக்கம், கிடைத்ததின் நோக்கம்,மரணத்தை வென்று கடவுள் நிலை அடைவதாகும் .அதாவது மரணமில்லா பெருவாழ்வு என்பதாகும்.நாம் எங்கிருந்து வந்தோமோ அங்கு செல்லவேண்டும்.வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது!வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது ? என்று கண்ணதாசன் பாடல் வரிகள் சொல்லுகின்றன.
அப்படி என்றால் மனிதன் எப்படி வாழ வேண்டும்? என்பதை வாழ்ந்து காட்டியவர் வள்ளலார் .அவர் வாழ்ந்து வந்த பாதையை கடைபிடித்தால் மரணத்தை வென்று கடவுள் மயமாகலாம்.அவர் எழுதி வைத்த திரு அருட்பாவில் அனைத்து உண்மைகளும் மிகவும் தெளிவாக இருக்கிறது .அதை வாங்கி படித்து மனிதர்கன் மனிதர்களாக வாழ்வோம்
எனக்கு வேண்டியதை எல்லாம் இறைவன் அருட்பெரும் ஜோதி ஆண்டவர் தருகிறார்.என்னை ஆண்டவர் வழி நடத்துகிறார்.அவர் வழியில் நான் செல்கிறேன் இதுதான் உண்மையாகும் .
எல்லா உயிர்களையும் ஒன்று என்று யார் நினைக்கின்றார்களோ அவர்களை நான் கடவுளாக பார்க்கிறேன் அவர்கள் இட்ட பணியை என்னுடைய சிரமேற் கொண்டு செயல்பட என்னுடைய அறிவு தயாராக இருக்கிறது என்கிறார். வள்ளலார்.
உண்மையை உணர்ந்து உறுதியுடன் வாழ்வோம் .
கொல்லா நெறியே குவலயம் ஓங்குக
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
உங்களுக்கும் நல்லதாய் , எனக்கும் நல்லதாய்
நினைப்பதும்,செய்வதும் நித்தியகடன்
==========================
முடிசார்ந்தமன்னரும்முடிவில
பிடிசாம்பல்என்பதைமறவாதிரும
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக