ஆரோக்கியமான உணவுகளை தினமும் சாப்பிடுவதன் மூலம் நோய்கள் நம்மை அண்டவிடாமல் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம்.
ஹோட்டலுக்கு சென்றாலும் இட்லி சாம்பர் சாப்பிடும் காலம் போய் தற்போது பீட்சா, பர்கர், பிரெஞ் பிரைஸ், நூடில்ஸ் போன்ற உணவுகளை தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்புகின்றனர்.
இதனால் பல பக்கவிளைவுகள் ஏற்பட்டு, சில நாட்களில் மருத்துவரை நாடி செல்லும் நிலைமைக்கு நாம் ஆளாகிறோம்.
எனவே சில ஆரோக்கியமான உணவுகளை நாம் உட்கொண்டு வந்தால், நீண்ட ஆயுளுடன் நாம் வாழ முடியும்.
முட்டை
முட்டையில் புரதம், வைட்டமின் மற்றும் கனிம பொருட்கள் வளமையாக நிறைந்துள்ளது.
இது உங்கள் செறிவூட்டத்தை மேம்படுத்தி, ஆரோக்கியமான எடையை பராமரிக்கும்.
மேலும் மூளை வளர்ச்சிக்கு உதவி புரிந்து, கண் பார்வையை வலிமையாக்கி, இரத்த உறைதல் மற்றும் மார்பக புற்றுநோயை தடுக்கும்.
ஸ்ட்ராபெர்ரி
சுவைமிக்க ஸ்ட்ராபெர்ரி பார்ப்பதற்கு மட்டுமல்லாமல் சுவையிலும் அருமையாக இருக்கும்.
ஆண்டி-ஆக்சிடன்ட் அடங்கியுள்ள இந்த பழம் இதயகுழலிய நன்மைகளை அளித்து, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.
பூசணிக்காய்
பூசணிக்காயின் விதைகள் மற்றும் தசை என இரண்டுமே பல பயன்களை அளிக்கிறது.
இதிலும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள், வைட்டமின் ஏ, சி, கே மற்றும் ஈ, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்பு வளமையாக உள்ளது.
எலும்பு மெலிதல் நோய், மன அழுத்தம் போன்றவைகளை குணப்படுத்தும்.
வால்நட்
மூளையை போல் காட்சியளிக்கும் இந்த நட்ஸ், உங்கள் மூளைக்கு மிகவும் நல்லதாகும்.
உங்கள் இதயம், மனநிலை, எலும்பு மற்றும் உடல் எடை குறைப்பில் பெரும் பங்கை வகிக்கின்றது.
மேலும் தூக்கமின்மை, பித்தக்கற்கள், சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோய் போன்றவைகளை எதிர்த்து போராடவும் உதவும்.
கிரீன் டீ
தினமும் இரண்டு கப் கிரீன் டீ பருகினால், உங்கள் சருமத்தில் மிகவும் நல்லது. கிரின் டீ கொழுப்பை குறைப்பதற்கு நல்ல மருந்து.
கீல்வாதம் வலியை ஆற்றி, கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இதய நோய்களை தடுக்க வல்லது.
இதனால் பற்கள் எப்போதும் பளிச்சென்று இருக்கும். மேலும் அலர்ஜி மற்றும் தொற்றுக்களை துரத்தி அடித்து பருக்களை குறைத்து தடுக்கவும் செய்யும்.
தயிர்
தயிரில் அளவுக்கு அதிகமாக நல்ல பாக்டீரியா உள்ளது.
மேலும் அதில் முனைப்புடனான நுண்ணுயிர்கள் இருப்பதால், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, லாக்டோஸ் சகியாமை, குடல் புற்று நோய் மற்றும் குடல் பகுதி நோய்கள் போன்ற இரையக குடலிய பிரச்சனைகளுக்கு உதவிடும்.
இதை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் எலும்பு மெலிதல் நோயை தடுத்து இரத்தக் கொதிப்பு குறையும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக