நமது தோல் மூன்று வகையானது, வறண்ட தன்மையான தோல், எண்ணைப் பசையான தோல், சாதாரண தோல். இதன் தன்மையை பொறுத்து பாதிப்புகள் உண்டாகலாம்.பாக்டீரியா மாதிரியான நுண்ணுயிரிகள் தோலில் முகப்பரு, வியர்க்குரு, படை,கரப்பான், பித்த வெடிப்பு போன்ற பாதிப்புகளை உருவாக்கும். பொதுவில் நமது குருதியில் அசுத்தங்கள் அதிகரித்தால் தோல் பாதிப்புகள் உருவாகும்.
நம் மாதிரி வெப்ப மண்டல பகுதியில் வாழ்கிறவர்களுக்கு உடலின் கழிவுகள் வியர்வையாகவும் வெளியறும். வெளியேறும் நீர் காய்ந்து போனாலும், அழுக்குகள் தோலின் மேல் படியும். அதில் நுண்ணுயிரிகள் உருவாகி உடல் நாற்றத்தை உண்டாக்கும்.ஒரு நாளைக்கு இரு முறையாவது நீராடச் சொன்னதன் அறிவியல் அர்த்தம் இதுதான். வியர்வை நன்கு காய்ந்த பின்னரே நீராட வேண்டும்.
இனி இந்த பாதிப்புகளுக்கு சித்தர்கள் அருளிய எளிய வைத்திய முறைகளைப் பார்ப்போம்.
வியர்க்குரு
""""""""""""""""""""""""""
சந்தனக் கட்டையை உரசி அதை மஞ்சள் கிழங்குச் சாருடன் கலந்து பூச வியர்க்குறு சுகமாகும்.
ஊமத்தை செடியின் இலையை எடுத்து அதில் விளக்கெண்ணை தடவி வதக்கி வேனல் கட்டிகளின் மேல் கட்டினால் கட்டிகள் பழுத்து உடைந்து விடும், இரண்டு மூன்று தடவைகள் இப்படி கட்ட வேண்டும்.
முகப்பரு நீங்க...
""""""""""""""""""""""""""
செங்கீரைத் தண்டை அரைத்து கட்டிகள், பருக்களுக்கு தடவி வந்தால் அவை பழுத்து உடையும்.
துத்தி இலையை அரைத்து பருக்கள் மேல் தடவி வந்தாலும் பருக்கள் நீங்கும்.
படைகள் நீங்க...
"""""""""""""""""""
தகரை செடியின் வேர் எடுத்து தூளாக்கி அத்துடன், கற்பூரம், சாம்பிராணி இவைகளை சம அளவில் சேர்த்து குழித்தைலம் எடுத்து அந்தத் தைலத்தை படர் தாமரை, இடுப்புக் கடுவன் முதலிய படைகளுக்கு தடவி வந்தால் அவை உதிர்ந்து விடும்.
பீத ரோகினியை தேனில் அரைத்து பூசிவந்தால் படர் தாமரை முதலிய தோல் வியாதிகள் நீங்கும்.
பித்த வெடிப்புகள் நீங்க...
""""""""""""""""""""""""""
சிவன் வேம்பு வேர் எடுத்து பால் விட்டரைத்து தினமும் பாலில் கலந்து உண்டுவந்தால் பித்தவெடிப்புகள் நீங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக