தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, January 29, 2015

மூட்டு வலியால் அவஸ்தையா? உங்களுக்கான சூப்பர் டிப்ஸ்

இன்றைய காலகட்டத்தில் 30 வயதை எட்டி விட்டாலே மூட்டு வலி தொற்றிக் கொள்கிறது.
மூட்டுகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காததே இதற்கு காரணம்.
எனவே ஆரோக்கியமான உணவை உட்கொண்டு, சீரான உடற்பயிற்சிகளை செய்து வந்தால் மூட்டு வலியை விரட்டி அடிக்கலாம்.
* மூட்டுக்களில் ஏற்படும் பிரச்னையை தொடக்கத்திலேயே சரிசெய்ய வேண்டும், வீக்கம் ஏதும் இருந்தால் மருத்துவரை அணுகுவது நலம்.
* உடல் எடையை சீராக பார்த்துக் கொள்ள வேண்டும், எடை அதிகரிக்கும் பட்சத்தில் மூட்டுகளுக்கு அதிகப்படியான அழுத்தம் ஏற்பட்டு வலிகள் உண்டாகும்.
* நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள், தினமும் உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சியை மேற்கொண்டால் மூட்டுகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.
* காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் கால்சியம் அதிகம் நிறைந்த பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment