தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 31 ஜனவரி, 2015

இயேசு மீது போர்த்தப்பட்ட புனித உடற்போர்வை (வீடியோ இணைப்பு)


இயேசு கிறிஸ்து இறந்த பின் அவர் மேல் போர்த்தப்பட்டிக்கலாம் என்று கருதப்படும் Shroud of Turin எனப்படும் புனித உடற்போர்வை பற்றிய மர்மங்கள் இன்னும் விலகாமலேயே உள்ளது.
புனித உடற்போர்வை எனப்படும் அந்த லினன் துணியில் பதிந்திருக்கின்ற மனிதனின் உருச்சாயல் அம்மனிதன் சிலுவையில் அறையப்பட்டு, வேதனையுற்ற தோற்றத்தில் உள்ளதாகத் தெரிகிறது.
செக்கோந்தோ பீயா என்பவரால் 1898ல் எடுக்கப்பட்ட புகைப்படத்தின் நெகட்டிவ் மூலமாகவே முதன் முதலில் உருவம் உலகிற்கு தெளிவாக தெரிந்தது.
இத்துணியில் பதிந்திருக்கின்ற மனிதனின் உருவச்சாயல் சிலுவையில் அறையுண்டு இறந்து, துணியால் பொதிந்து கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட இயேசுவின் உருச்சாயலாக இருக்கலாம் என்று பலர் கருதுகின்றனர்.
இளஞ்சிவப்பு நிறம்கொண்ட கறைகள் துணியில் தெரிவது அத்துணியால் போர்த்தப்பட்ட மனிதனின் உடல் சிலுவையில் அறையப்பட்டு, பல காயங்கள் ஏற்பட்டு அவர் இரத்தம் சிந்தியதைக் காட்டுகின்றன.
இது விவிலியத்தின் நற்செய்தி நூல்களில் இயேசு துன்பங்கள் அனுபவித்து, கசையடி பட்டு, முண்முடி சூடப்பட்டு, சிலுவையைச் சுமந்து சென்று, அச்சிலுவையில் அறையப்பட்டு உயிர்துறந்ததையும் அவருடைய உடலின் வலது பக்கத்தில் ஈட்டி ஊடுருவியதையும் காட்டுகின்ற காட்சியை அப்படியே சித்தரிப்பதாகப் பலர் கருதுகின்றனர்.
எனவே, இந்த உடற்போர்வை இயேசுவின் உடலைக் கல்லறையில் மூடியிருந்த போர்வையே என்று அவர்கள் கருதுகின்றனர்.
இப்புனித துணி நெருப்பில் இருந்து எரிவதிலிருந்தும் தப்பியதாகவும் அறியப்படுகிறது.
அறிவியலார், இறையியலார், வரலாற்றாளர், ஆய்வாளர் போன்ற பலதுறை வல்லுநர்கள் நடுவே இந்த உடற்போர்வை இன்றும் சர்ச்சைக்கு உரியதாகவே உள்ளது.
இந்த உடற்போர்வை இயேசு வாழ்ந்து இறந்த கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சார்ந்தது என்று ஒரு சாராரும், இது பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது என்று மறு சாராரும் சர்ச்சையிட்டு கொண்டுள்ளனர்.
இந்த போர்வையின் கருப்பு வெள்ளை ஒளிப்படம் சுவிட்சர்லாந்தின் லோசான் நகரக் காட்சியகத்தில் உள்ளது.
ஆனால் கிறிஸ்துவினைப் போன்ற உருவம் எப்படி இந்த துணியில் மெல்லியதாக தெரிகிறது என்பது ஆச்சர்யமாக உள்ளது.
இந்த உடற்போர்வை உண்மையிலேயே இயேசுவைக் கல்லறையில் அடக்கம் செய்தபோது அவருடைய உடலைப் பொதிந்த போர்வைத் துணிதானா என்பது குறித்து கத்தோலிக்க திருச்சபை இதுவரை அதிகாரப்பூர்வ நிலைப்பாடு எடுக்கவில்லை.
அதாவது திருச்சபை இந்தப் போர்வை இயேசுவின் உடலை அடக்கம் செய்தபோது அந்த உடலை மூடிய துணியே என்று சாதிக்கவோ, அதை மறுக்கவோ இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக