தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 23 ஜனவரி, 2015

பெண்ணிற்கு பணத்தை வாரி வழங்கிய பேஸ்புக்

அமெரிக்காவில் உள்ள நீதித்துறைசார் நிறுவனம் ஒன்று Sondra Arquiett எனும் பெண்ணிற்கு 134,000 அமெரிக்க டொலர்களை அபராதமாக செலுத்தியுள்ளது.
இதற்கு அந்நிறுவனம் போலி பேஸ்புக் பேஜ் ஒன்றினை உருவாக்கியிருந்த நிலையில் குறித்த பெண்ணின் படத்தினை அரைகுறை ஆடையுடன் பதிவேற்றியிருந்தமையே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது படத்தினை குறித்த பேஸ்புக் பேஜில் பார்வையிட்ட அப்பெண் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் குறிப்பிட்ட அபராதத் தொகையினை செலுத்த வேண்டிய நிலைக்கு அந்நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது.
அதே நிறுவனத்திலே இப்பெண்ணும் பணிபுரிவதுடன் தனது கைப்பேசியினை பார்வையிடுவதற்கு அங்கிருந்த சக ஊழியர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளார். இதன்போதே கைப்பேசியிலிருந்த குறித்த படம் களவாடப்பட்டு பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக