தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 21 ஜனவரி, 2015

பிறந்த குழந்தைகள் பற்றிய ஆச்சரியமான விடயங்கள்

பொதுவாக ஒரு குழந்தையின் பிறப்பு என்பது தாயின் மறுபிறவி என கூறுவோம்.
ஒவ்வொரு தாயும் தன் குழந்தையை பெற்றெடுக்கும் போது ஏற்படும் உணர்ச்சிகளை விவரிக்க வார்த்தையே இல்லை.
குழந்தை வளர்ப்பு பற்றி பெற்றோருக்கு தெரிந்திருப்பது அவசியம். ஆனால் புதிதாக பிறந்த குழந்தைகள் பற்றி பெற்றோர்கள் தெரிந்து கொள்ள சில ஆச்சரியமான விடயங்கள் உள்ளது.
கொழு கொழு “மே” குழந்தை
பிற மாதங்களில் பிறந்த குழந்தைகளை விட, மே மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் அதிக எடையுடன் இருக்கும்.
தாயின் வாசனை
பிறந்த நொடியிலிருந்தே தன் தாயின் வாசனையைக் குழந்தைகள் அறிந்து வைத்திருக்கும்.
அதுமட்டுமின்றி பிறந்த சில வாரங்களில், தம் தாயை அவை அடையாளமும் கண்டு கொள்ளும்.
கருவில் கேட்கும் திறமை
தாயின் கருவில் இருக்கும் குழந்தையால் வெளியே ஒலித்துக் கொண்டிருக்கும் பல விஷயங்களைக் கேட்க முடியும்.
நல்ல விடயங்களை சத்தமாகப் படித்துக் காண்பிப்பது, மெல்லிசை கேட்பது இவையெல்லாமே குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் விடயங்களாகும்.
சுவை தெரியாது
பிறந்த குழந்தைக்கு நான்கு மாதங்கள் ஆகும் வரை உப்பின் சுவை தெரியாது.
இதற்கு சோடியத்தை உருவாக்கும் சிறுநீரகங்கள் முழு வளர்ச்சியடையாமல் இருப்பது தான் காரணம்.
அகச் செவி நல்லா கேட்கும்
பிறந்த குழந்தையிடம் உள்ள உறுப்புக்களில், அகச் செவி என்று அழைக்கப்படும் உள்புறக் காது மட்டுமே முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்கும்.
இளம் நீச்சல் வீரர்கள்
பிறந்த குழந்தைகள் இயற்கையிலேயே நீச்சல் வித்தைகளைப் பெற்றிருக்குமாம்! தண்ணீருக்கு அடியில் குழந்தைகளால் மூச்சை அடக்க முடியும்.
சுமார் பத்து மாதங்கள் கருவில் மிதந்து கொண்டிருந்த அனுபவம் தான் அது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக