மங்கோலியா நாட்டில் தவக்கோலத்தில் இறந்த புத்த துறவியின் மம்மி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தாமரை நிலையில் அமர்ந்து யோகாசனம் செய்தபடி உயிர்நீத்த அந்த துறவியின் உடல் சுமார் 200 ஆண்டுகளுக்கு முற்ப்பட்டதாக இருக்கக்கூடும் என கருதப்படுகிறது.
திபெத்திய புத்த துறவிகளிடையே இதுபோல் யோக நிலையில் தியானம் செய்தபடி உயிர் துறக்கும் பழக்கம் நடைமுறையில் இருந்து வந்ததால், இந்த துறவியும் திபெத்திய லாமாவின் சீடராக இருக்கலாம் என கருதப்படுகிறது.
கால்நடையின் தோலால் சுற்றி ‘மம்மி’ முறையில் பாதுகாக்கப்பட்டிருந்த இந்த உடல் எத்தனை ஆண்டு காலம் பழமையானது? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக