தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 31 ஜனவரி, 2015

செல்ஃபி மூலம் மனநிலையை கண்டுபிடிக்கும் புதிய ஆப்

அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் செல்ஃபி வீடியோக்கள் மூலமாக மனநிலையை அறிந்து கொள்ளும் புதிய அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
அமெரிக்காவின் மோன்ரோ கவுண்டியில் உள்ள ரோசெஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கணினியை மையமாகக்கொண்ட அப்ளிகேஷன் ஒன்றை வடிவமைத்துள்ளனர்.
இது சமூக வலைதளங்களில் பதிவேற்றும் செல்ஃபி வீடியோவை ஆய்வு செய்து அதை பதிவேற்றிய ஆண் அல்லது பெண்ணின் மன நிலையை தெளிவாக கூறுகிறது.
இந்த ஆப், கணனி மற்றும் போன் பயன்படுத்துகையில் நமது நடத்தைகளை தொடர்ந்து உற்று நோக்குகிறது.
நமது நெற்றியில் ஏற்படும் வண்ண மாற்றங்கள், இதயத்துடிப்பு, கண் இமைகளின் துடிப்பு, தலையின் அசைவு, டிவிட்டரில் வெளியிடும் டிவிட்டுகள், கணனி அல்லது போனில் தட்டச்சு செய்யும் வேகம், மவுஸ் ஸ்க்ரோல் செய்யும் வேகம் போன்றவற்றையும் கண்காணித்து உங்கள் மனநலம் எவ்வாறு உள்ளது என்று தெளிவாகச்சொல்கிறது.
இதில் வாடிக்கையாளர்கள் தங்கள் மன நிலையை சொல்லவோ, தகவல்களை அளிக்கவோ அல்லது சிறப்பு ஹெட்செட் எதுவும் அணியத்தேவை இல்லாததே இந்த ஆப்பின் சிறப்பம்சமாக உள்ளது.
27 பங்கேற்பாளர்களைக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவு டெக்சாஸின் தலைநகர் ஆஸ்டினில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக