பல் போனாலே சொல் போச்சு என்று சொல்வார்கள். அது மட்டுமா அழகு, இளமைத் தோற்றம் என அனைத்தும் தொலைந்து போய்விடும்.
இக்கால கட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவதிப்படும் பொதுவான பிரச்னைகளில் ஒன்று தான் பல்.
பல் வலி, மஞ்சள் நிற பற்கள், ஈறுகளில் பிரச்னை என அடுக்கிக் கொண்டே போகலாம்.
பல் வலி
பல்லில் துவாரம், தொற்றுக்கள், பற்களை ஒழுங்காக சுத்தம் செய்யாமை போன்ற காரணங்களினால் தான் பல் வலி ஏற்படுகிறது. இதனை மிக எளிமையாக வீட்டு வைத்தியத்தின் மூலம் சரிசெய்யலாம்.
* முழு கிராம்பு ஒன்றை பாதிக்கப்பட்ட பற்களின் இடையே வைத்து சிறிது நேரத்திற்கு வாயை இறுக்கமாக மூடிக் கொள்ளவும், இதனால் கிராம்பில் இருக்கும் ரசாயனம் வெளியேறி பல் வலி குணமாகும்.
* பல் வலி இருக்கும் இடத்தில் ஜாதிக்காய் பொடியை தடவிக் கொண்டு, சிறிது நேரம் கழித்து கழுவினால் நிவாரணம் பெறலாம்.
* உடனடி நிவாரணத்திற்கு சிறிய அளவிலான லவங்கப் பட்டையை வாயில் போட்டு மென்று அதன் சாற்றை விழுங்கவும்.
வாய் துர்நாற்றம்
பெரும்பாலான நபர்கள் அவதிப்படும் பிரச்னைகளில் ஒன்று வாய் துர்நாற்றம், சாப்பிட்ட உடன் வாயை நன்றாக சுத்தம் செய்வது அவசியம்.
* ஏலக்காயில் இனிமையான வாசனையும், பக்டீரியா எதிர்ப்பி குணங்களும் அடங்கியுள்ளதால் வாய் துர்நாற்றத்திற்கு சிறந்த மருந்தாக இருக்கும்.
* உணவு சாப்பிட்ட உடன் இதனை அப்படியே மெல்லலாம் அல்லது டீயில் கலந்து குடித்தாலும் துர்நாற்ற பிரச்னைக்கு வழிபிறக்கும்.
* இதே போன்று லவங்க பட்டையையும் செய்தால் துர்நாற்ற பிரச்னையிலிருந்து விடுபடலாம். பொதுவாக உணவுக்கு பிறகு பயன்படுத்தப்படும் பெருஞ்சீரகமும், வாய் துர்நாற்றத்திற்கு தீர்வாக இருக்கும்.
ஈறு பிரச்னைகள்
ஈறுகளில் கிருமிகள் தொற்றிக் கொள்ளும் போது அழற்சி மற்றும் வீக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
* வீங்கியிருக்கும் ஈறுகளின் மீது காய்ந்த இஞ்சி பொடியை தடவினால், வலி மற்றும் வீக்கத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
* ஜாதிக்காய் எண்ணெயை பஞ்சு உருண்டையின் மீது தடவி வலி இருக்கும் இடத்தில் தடவவும்.
|
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
புதன், 21 ஜனவரி, 2015
பல் பிரச்னைகளுக்கு சூப்பர் டிப்ஸ்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக