பர்கர், சிப்ஸ் போன்ற உணவுகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதால் கொலஸ்ட்ரால், நீரழிவு, இருதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன.
எனினும் இவ்வாறான உணவுகள் 25 சதவீதமானவர்களை தாக்குவதில்லை என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆராய்ச்சிக்காக தாமாக முன்வந்த சிலரை பர்கர், சிப்ஸ் போன்வற்றினை அதிகளவில் உட்கொண்டு ஒரு நாளுக்கான ஊட்டச்சத்தை 1000 கலோரியால் அதிகரிக்கச் செய்தனர்.
இதன்போது 25 சதவீதமானவர்களுக்கு எவ்விதமான நோய் அறிகுறிகளும் ஏற்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வு வொசிங்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பிரிவு விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக