தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 22 ஜனவரி, 2015

பீர் குடித்தால் மாரடைப்பு வராது


யாருக்கு வராது,பீர் விற்பவருக்கா?யாருக்கு நல்லது ஆணுக்கா பெண்ணுக்கா பீர் உற்பத்தியாளருக்கா?நம் பெண்கள் குடித்தால் ஆண்களுக்கல்லவா மாரடைப்பு வந்துவிடும்!!

பீர் குடித்தால் மாரடைப்பு வராது என்று அமெரிக்க பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
பீர் என்பது பழமையான மதுபானங்களில் ஒன்றாகும். அதுவும் சுமார் 7000 ஆண்டுகளாக உபயோகத்தில் இருக்கும் உலகின் மிகப் பழமையான மதுபானம். 4000 ஆண்டுகள் கிறிஸ்துவிற்கு முன்பாகவே பீர் வழக்கத்தில் இருந்துள்ளதாக அக்காலக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவ கல்லூரியின் மருந்தியல் பேராசிரியர் தலைமையில் நடந்த ஆய்வில், தினசரி பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம் என்று கண்டறிந்தனர்.
உலகின் பல நாடுகளிலும் பீர் உபயோகத்தில் இருந்தாலும் அதிக பீர் குடிக்கும் மக்களைக் கொண்ட நாடு அமெரிக்கா தான். அங்கு ஆண்டொன்றிற்கு சராசரியாக ஒரு மனிதன் 100 லிட்டர் பீர் குடிக்கின்றான்.
பீரில் இருக்கக் கூடிய அடிப்படைப் பொருட்கள், தண்ணீர், மாவுச்சத்து, ஈஸ்ட் போன்றவை தான். இவை புளிப்பதால் ஆல்கஹால் உற்பத்தி ஆகின்றது. சுவை சேர்ப்பதற்காக சில மூலிகைகளும், ஹாப்சும் சேர்க்கப்படுகின்றன.
ஆய்வில், 45 முதல் 64 வயதுக்குப்பட்ட 14,629 பேர், வாரத்தின் 7 நாட்களும் தினமும் 350 மி.லி அளவு பீர் கொடுத்து சாப்பிட செய்தனர்.
தொடக்கத்தில் 1987 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் அவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. தொடர்ந்து அவர்கள் 2014 ஆம் ஆண்டிலும் பரிசோதிக்கப்பட்டனர்.
அவர்களில் டீ குடிப்பவர்களை விட பீர் குடிப்பவர்களில் ஆண்களில் 20 சதவீதம் பேருக்கும், பெண்களில் 16 சதவீத பேருக்கும் குறைவாகவே மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக