தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 27 ஜனவரி, 2015

எப்போதும் கணனியில் வேலையா? கண்களை பாத்துக்கோங்க

கணனி துறையில் பணிபுரியும் நபர்கள் பெரும்பாலும் சந்திக்கும் பிரச்னைகளில் ஒன்று தான் கண் வலி, கண் வீக்கம்.
எளிய முயற்சிகளின் மூலம் கண்களை மிக எளிதாக பாதுகாக்கலாம்.
* கணனி துறையில் வேலைக்கு சேர்வதற்கு முன்பாக, உங்களை கண்களை பரிசோதித்து கொள்ளுங்கள்.
* மேலும் பணியில் இருப்பவர்கள் ஆண்டிற்கு ஒருமுறை கண்களை பரிசோதிப்பது அவசியம்.
* கணனி பயன்படுத்தும் இடங்களில் அதிகப்படியான வெளிச்சத்தை தவிர்த்து, போதுமான அளவு வெளிச்சம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
* முடிந்த வரையில் LED Display-வை பயன்படுத்துங்கள்.
* தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்காமல், சிறிது நேரம் கண்களை மூடி ஓய்வு கொடுத்து பின் வேலையை தொடர்வது நலம்.
* தற்போது கணனியில் வேலை செய்பவர்களுக்கு என்றே பிரத்யேக கண்ணாடிகள் வந்துவிட்டது, அதனை பயன்படுத்தினால் பிரச்னைகள் குறைய வாய்ப்புள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக