தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 23 ஜனவரி, 2015

தினமும் பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!



பாகற்காய் என்றாலே முகம் சுளிப்பவர்கள் தான் ஏராளம், இதற்கு காரணம் அதன் கசப்புத் தன்மை தான்.
ஆனால் இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன, தினமும் காலையில் பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்.
சர்க்கரையின் அளவை குறைக்கும்
மூன்று நாட்களுக்கு ஒருமுறை பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
இதில் உள்ள மோர்மோர்சிடின் மற்றும் சரடின் என இரண்டு ஆன்டி-ஹைபர் க்ளைசீமிக் பொருட்கள், தசைகளுக்கு இரத்த சர்க்கரையை கொண்டு செல்லும் முக்கிய வேலையை செய்கிறது.
அதுமட்டுமல்லாது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, இரத்த சுத்திகரிப்பானாகவும் செயல்படுகிறது.
பசியை தூண்டும்
சரியாக உணவு உண்ணாத பட்சத்தில், பலவிதமான நோய்கள் தொற்றிக் கொள்ளும்.
சீரான முறையில் பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், செரிமான அமிலம் சுரப்பது மேம்படும், எனவே பசியும் அதிகரிக்கும்.
கணைய புற்றுநோய்க்கு மருந்து
கணைய புற்றுநோய் அணுக்களை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது பாகற்காய் ஜூஸ்.
இதிலுள்ள புற்றுநோய் எதிர்ப்பி பொருட்கள், கணைய புற்றுநோய் அணுக்கள் க்ளுகோசை மெட்டபாலைஸ் செய்வதை தடுக்க செய்யும், எனவே அணுக்களுக்கு வரவேண்டிய ஆற்றல் வராமல் போவதால் அவை அழிந்துவிடும்.
தோல் அழற்சிக்கு நிவாரணம்
தினமும் காலையில் வெறும் வயிற்றில், ஒரு கப் பாகற்காய் ஜூஸ் உடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை ஜூஸை கலந்து குடித்து வரவும்.
இதனை தொடந்து 3-6 மாதங்கள் வரை செய்து வரும் போது, தோல் அழற்சி தொடர்பான பிரச்னைகள் முடிவுக்கு வரும்.
சீரான கண்பார்வை
பாகற்காயில் பீட்டா-கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ உள்ளதால், கண் சம்மந்தமான நோய்களுக்கு தீர்வாக உள்ளது.
மேலும் இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், விஷத்தன்மையுள்ள அழுத்தத்தால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக