பத்மாட்சன் மகாலக்ஷ்மி தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என தவமிருந்தான். மகாலட்சுமி அவன்முன் தோன்றி, நான் விஷ்ணுவை என்றும் பிரியேன். நீ அவரிடம் அனுமதி கேட்டு உன் ஆசையைப் பூர்த்தி செய்து கொள் என்று கூறினாள். அவன் அப்படியே செய்து விஷ்ணுவிடம் ஒரு மாதுளம் கனியைப் பெற்றான். அதைப் பிளந்த போது அதிலிருந்து ஒரு அழகிய பெண் குழந்தையாக மகாலட்சுமி தோன்றினாள். அவளுக்கு பத்மை என பெயரிட்டு வளர்த்து, நீலநிறம் உள்ளவனுக்குதான் பெண் தருவேன் என்றான் அந்த அசுரன். உடனே அனைவரும் அவனிடம் போரிட்டு அவனைக் கொன்றனர். தந்தை இறந்ததும் யார் கையிலும் சிக்காமல் பத்மை தீக்குளித்தாள். ஆனால் தீயினுள் புதிய பூப்போல இருந்தாள். சிலநாள் சென்றதும் வெளியில் வந்து அமர்ந்தாள். அவ்வழியே சென்ற இராவணன் அவளைக் கண்டு மோகித்து அவளை அடைய முயன்றான். உடனே பத்மை, என்னால்தான் நீ அழிவாய் எனக் கூறிவிட்டு தீயில் பாய்ந்தாள். இராவணன் தீயை அணைத்துவிட்டு உள்ளே தேட ஒரு ரத்தினம் கிடைத்தது. அதை ஒரு பெட்டியில் வைத்து எடுத்துச் சென்று மண்டோதரியிடம் கொடுத்தான். அவள் அந்த பெட்டியை திறந்து பர்த்த போது அழகிய பெண் குழந்தை இருந்தது. அதைத் தன் குழந்தைபோல் எண்ணி கொஞ்சினாள். இராவணன் அந்தக் குழந்தையைத் தூக்க முயலும் போது, இராவணா! இந்தப் பெண் குழந்தையால் தான் உனக்கும், இலங்கைக்கும் அழிவு நேரும் என அசரீரி சொன்னது. உடனே அதைக் கொல்ல முயல, மண்டோதரி தடுத்து, இது நம் குழந்தை. இதைக் கொல்ல வேண்டாம் பெட்டியிலிட்டு கண்காணாமல் வெகுதொலைவில் சென்று பூமியில் புதைத்து விடுங்கள் என்றாள். அப்படியே இராவணன் காவலர்களிடம் ஆணையிட்டான். அக்குழந்தையை இமயமலை அடிவாரத்தில் புதைத்து விட்டனர்.
ஜனகர் மிதிலையில் ஏர் உழும்போது பெட்டியில் கிடைத்தது இந்தப் பெண் குழந்தை தான். அதற்கு சீதை எனப் பெயரிட்டு வளர்த்து இராமனுக்குத் திருமணம் செய்வித்தனர். அந்த சீதையைத் தான் வனவாசத்தின் போது இராவணன் தன் நாட்டுக்கே திரும்ப கொண்டு சென்று அதனாலேயே அழிந்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக