தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, January 29, 2015

பாலைவனத்தில் புதையுண்ட அழகிய ரோஜா நகரம் (வீடியோ இணைப்பு)


கொள்ளை கொள்ளும் பேரழகுடன் திகழ்ந்த பெட்ரா நகரம் பாலைவனத்துக்குள் புதைந்து கிடக்கிறது.
கண்களால் பார்த்தாலும் பெட்ராவை முழுவதும் உள்வாங்கிக் கொள்வது இயலாத காரியம்.
சவுதி அரேபியாவுக்கு அருகில் அமைந்துள்ள சிறிய நாடுதான் ஜோர்டான். கி.மு நான்காம் நூற்றாண்டில் ஜோர்டான் பிரதேசத்தை ஆண்டுவந்த நபாட்டியன்கள் காலத்தில் பெட்ரா நகரம் உருவாக்கப்பட்டது.
செலா என்று பண்டைய காலத்தில் அழைக்கப்பட்ட அந்த நகரம் பிற்காலத்தில் பெட்ரா என அழைக்கப்பட்டது.
'பெட்ரா' என்றாலும் 'செலா' என்றாலும் பாறை என்றுதான் பொருள். மணல் கல் வகையைச்சேர்ந்த அந்த பாறைகள் வெள்ளை மற்றும் ரோஜா வண்ணத்தில் காட்சி அளிக்கும் தன்மை உடையவை.
பெட்ராவிலுள்ள பெரும்பாலான கட்டடங்கள், ஆலயங்கள், கல்லறைகள் ஆகியன பாறைகளில் குடையப்பட்டு உருவாக்கப்பட்டவை.
பெட்ரா நகர் கலைப்பொக்கிஷங்களை பொதுவாக நான்கு வகைகளுக்குள் அடக்கிவிடலாம். கருவூலக் கட்டடம், வெளிப்புற கல்லறைகள், வாடி மூசா கல்லறைகள்,கலைக்காட்சியகம் ஆகியனவையே அவை.
பெட்ரா நகரம் அதன் கலைப்படைப்புகளுக்காக மற்றுமின்றி நீர் வினியோகம், நீர்ப் பாசன முறைகளுக்காகவும் கவனப்படுத்தப்படுகிறது.
அவர்கள் கட்டிய மகா அணை, வெள்ளப்பெருக்கின் போது மிகுதியாக வந்த தண்ணிரை சேகரிக்கவும், மழைக்காலத்தில் பெருகி வரும் உபரி நீரைத் தேக்கவும் பயன்பட்டிருக்கிறது.
கி.பி.1812 ஆம் ஆண்டு வரை இப்படி ஒரு நகரம் இருந்ததே மேற்கத்திய நாடுகளுக்குத் தெரியவே தெரியாது.
சுவிட்சர்லாந்து தொல்பொருள் ஆய்வாளர் ஜோஹன்னன் லுட்விக் புர்காடிட் என்பவர், பிரித்தானிய புவியியல் கழக ஆய்வு மையம் அளித்த பொருளாதார உதவியுடன் எகிப்து மற்றும் அரேபிய தேசங்களில் மேற்கொண்ட தொல்பொருள் ஆய்வுகளின் பலனாக பெட்ரா நகரம் வெளி உலகுக்கு தெரிய வந்தது.
அவரது குழுவினரின் அயராத முயற்சியில் பதினைந்து சதவிகித நகரப்பகுதிகளை மட்டுமே பூமியிலிருந்து மீட்டெடுக்க முடிந்தது. இன்னமும் 85 சதவிகித நகரம் மண்ணுக்குள்ளேயே மறைந்து கிடக்கிறது.
மேலும், 1985 -இல் யுனெஸ்கோ அமைப்பு பெட்ரா நகரை உலக கலாச்சாரச் சின்னமாக அறிவித்தது.

No comments:

Post a Comment