தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 29 ஜனவரி, 2015

2014- உலகம் ஒரு சிறப்பு பார்வை

2014 இந்த ஆண்டில் உலகில் நடந்த சம்பவங்கள் தான் எத்தனை, தொழில்நுட்ப ரீதியாக அதீத வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தது.
அதே சமயம் தீவிரவாதம், பெண்களின் மீதான தாக்குதல்கள் மற்றும் மக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்தன என்றே சொல்லலாம்.
மிரட்டும் ஐஎஸ்ஐஎஸ்
சிரியா மற்றும் ஈராக்கின் பகுதிகளை கைப்பற்றிய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கி, பல்வேறு அட்டூழியங்களை நிகழ்த்தினர்.
ஒருபக்கம் இந்த இயக்கத்தில் சேர பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வெளிநாடுகளில் இருந்து படையெடுத்தாலும், தலை துண்டிப்பு, இளம் பெண்களை சீரழித்தல் என்பன போன்ற பல கொடூரமான சம்பவங்களை அரங்கேற்றி வந்தனர்.
இவர்களை ஒழிக்க அமெரிக்கா உட்பட நேச நாடுகள் இணைந்து தாக்குதல் நடத்தி, ஆயிரக்கணக்கான தீவிரவாதிகளை கொன்று குவித்து வருகின்றது.
ஈடுபட்ட போதிலும், எவ்வித பலனும் கிடைக்கப் பெறவில்லை, சொல்லப் போனால் விமானத்தில் பயணித்த உறவினர்களின் கண்ணீர் துளிகள் மட்டும் தான் மிச்சம்.

உறைய வைத்த பனிப்புயல்
உலகநாடுகள் பலவற்றில் பனிப்புயல் தாக்கம் இருந்தாலும், கனடா அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளிலேயே அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த பனிப்புயலால், மக்கள் ஐஸ் கட்டியாக உறைந்ததோடு மட்டுமல்லாமல் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

அச்சுறுத்தும் எபோலா
தீவிரவாதம் தலைதூங்கி இருந்தாலும் எபோலா என்னும் வைரஸ் ஆப்ரிக்க நாடுகள் மட்டுமின்றி உலக நாடுகளையே அச்சுறுத்தி வந்தது.
தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும், இதனால் பலியான நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் சென்றது.
இந்த ஆண்டில் மட்டும் சுமார் 7 ஆயிரம் பேரின் உயிரை காவு வாங்கியது எபோலா என்னும் கொடிய வைரஸ்.

ஊர் சுற்றிய குட்டி இளவரசர்
இங்கிலாந்து அரசு குடும்பத்தை சேர்ந்த வில்லியம்ஸ்- கேட் தம்பதியினரின் மூத்த மகன் ஜார்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ்.
புதிதாய் அவதாரம் எடுத்த அரசர் போன்று தோற்றமளித்த ஜார்ஜ், முதன்முறையாக தன் பெற்றோருடன் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.
சென்ற இடத்தில் எல்லாம் சிறப்பு என்பது போல் மக்களின் பலத்த வரவேற்புக்கு மத்தியில், ஹாட் டாப்பிக்காக வலம்வந்து கொண்டிருந்தார் குட்டி இளவரசர்.

மண்ணில் புதைந்த உயிர்கள்
பலத்த மழை, சூறாவளிக் காற்றினால் ஆப்கானிஸ்தானின் மலை அடிவார பகுதிகள் ஆட்டம் கண்டன.
மே மாதம் 2ம் திகதி ஏற்பட்ட பாரிய நிலச்சரிவினால், 2500 பேர் உயிருடன் மண்ணில் புதைந்து பரிதாபமாய் பலியாகினர்.
ஒருபக்கம் தீவிரவாதிகளின் அட்டூழியம், மறுபக்கம் இயற்கை பேரழிவு என ஆப்கானிஸ்தானே நிலைக்குலைந்து போனது.

வைரலாய் பரவிய சாலஞ்ச்
இந்த ஆண்டையை புரட்டி போட்டு விட்டது ஐஸ் பக்கெட் சாலஞ்ச்.
ஏ.எல்.எஸ். எனப்படும் நரம்பு சம்பந்தமான நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதற்காக நிதி திரட்டவும் தொடங்கப்பட்டது ஐஸ் பக்கெட் சாலஞ்ச்.
மார்க் ஜீபெக்கர், பில்கேட்ஸ், சத்யா நாதெள்ளா உட்பட பல்வேறு பிரபலங்களும் இந்த சாலஞ்சை நிறைவேற்ற உலகம் முழுவதும் தீயாய் பரவியது.

சொர்க்கம் சென்ற இளம் மொட்டுகள்
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள இராணுவ பள்ளி ஒன்றில் கடந்த டிசம்பர் மாதம் 16ம் திகதி தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதில் 132 மாணவர்கள் உட்பட 150 பேர் பலியாகினர், ராணுவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பினர் இக்கொடூர தாக்குதலுக்கு விளக்கம் அளித்தனர்.

சோகத்தில் ஆழ்த்திய விமான விபத்துகள்
இந்த ஆண்டு விமான பயணிகளுக்கு சோகமான ஆண்டாகவே இருந்தது என்று சொல்லலாம்.
அடுத்தடுத்து நிகழ்ந்து விமான விபத்துகள் மக்களை அதிர்ச்சியடைய வைத்தன.
கடந்த மார்ச் மாதம் 8ம் திகதி 239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து பீஜிங் நோக்கி புறப்பட்ட MH-17 விமானம் நடுவானில் மாயமாகி போனது.
விமானம் கடத்தப்பட்டு இருக்கலாம், நடுக்கடலில் விழுந்திருக்கலாம் என்ற யூகங்கள் எழுந்தாலும் இதுநாள் வரையிலும் விடை கிடைக்கப் பெறாத மர்மமாகவே இருந்து வருகிறது.
தொடர்ந்து ஜீலை 17ம் திகதி நெதர்லாந்து நாட்டிலிருந்து 295 பேருடன் மலேசியா நோக்கிச் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது, அந்த விமானத்தில் பயணம் செய்த 295 பேரும் பரிதாபமாக பலியாகினர்.
இந்தோனேசியாவின் சுரபயா விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு டிசம்பர் மாதம் 27ம் திகதி புறப்பட்ட ஏர் ஏசியா “A320-200” என்ற விமானம், தனது பயணத்தை தொடங்கிய 42 நிமிடங்களில் மாயமாகி கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் 162 பேர் பலியாகினர்.
இதற்கிடையே உலகில் பல்வேறு அதிசய நிகழ்வுகள் நடந்தாலும், சோதனைகளை தகர்த்து சாதனை நிகழ்வுகளை மனதில் கொண்டு புத்தாண்டை வரவேற்போம்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக