தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 15 டிசம்பர், 2014

*-*-*-*-* பேச்சியம்மன்*-*-*-*-*


*****************************************
பேச்சி தமிழக கிராமங்களில் வழிபடும் ஒரு பெண் காவல் தெய்வம். தென்மாவட்ட மக்கள் அதிகம் வழிபட்டாலும், தமிழ்நாடு முழுக்க பேச்சிக்கு கோவில்கள் இருக்கின்றன.

* பேச்சியின் மறுபெயர்கள்
பேச்சி
பேச்சியம்மன்
பேச்சியாயி

* வழிபாடு
பொங்கல் வைத்து பூசை செய்யப்படுகிறது. பல இடங்களில் சைவ வழிபாடு என்றாலும், சில இடங்கள் ஆடு வெட்டியும் பூசை நடத்துகின்றார்கள்.

சரஸ்வதி தேவியின் அகோர நிலையே பேச்சி அம்மன். எனவே பேச்சில் குறைபாடு உள்ளவர்கள் இந்த அம்மனை வணங்கினால் பேச்சு குறைபாடு நீங்கும். அத்துடன் பேச்சுத்திறமை வேண்டுபவர்களும் இங்கு வந்து அம்மனை வழிபட்டால் சிறந்த பேச்சாற்றல் கிடைக்கும் என பலனடைந்தவர்கள் கூறுகின்றனர்.

ராகு கேது தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள நாகருக்கு அபிஷேக, அர்ச்சனை செய்தால் சிறந்த பலன் கிடைக்கும். அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

* தோற்றம்
அம்மனின் வலது புறம் ஓங்கிய கையுடனும். இடது கையில் குழந்தையுடனும் காலில் அரக்கனை மிதித்து இருப்பது கண்கொள்ளா காட்சியாகும். இந்த அம்மனை தரிசிக்கும் போது நமக்கு அது விக்ரகம் போல் தோன்றாது. ஒரு பெண் நேரில் நிற்பது போலவே தோன்றும்.

* பே(ய்)ச்சியம்மன்
'பேச்சியம்மன்' என்பது 'பே(ய்)ச்சியம்மன்' என்பதின் திரிந்த வடிவமாக கருதப்படுகிறது. சங்க இலக்கியங்களில் பேய் மகளிர் குறித்த பதிவுகள் இருக்கின்றன.

"பிணக்கோட்ட களிற்றுக் குழம்பி னிணம்வாய்ப் பெய்த பேய்மகளி ரினையொலி யிமிழ் துணைங்கைச் சீர்ப் பிணை யூப மெழுந்தாட வஞ்சு வந்த போர்க்களம்" (மதுரைக்காஞ்சி 24 -28)

"போரிலே வீழ்ந்த நல்ல தந்தங்களையுடைய யானைப் பிணங்களின் குருதியைக் குடித்து, சிதறிக் கிடந்த குறைதலைப் பிணம் எழுந்து தன்னோடு ஆடும்படி பேய்மகள் துணங்கைக் கூத்தாடுவாள்" என்று பாடுகிறார் மாங்குடி மருதனார். புறநானூற்றிலும் இவை மிகுதியாகக் காணப்படுகிறது.

"பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கு மடியேன்" என காரைக்கால் அம்மையார் குறித்து திருத்தொண்டர் தொகை போற்றுகிறது.

"பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்" என பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் திரௌபதை கூறுவதையும் நோக்கலாம். எனவே பேய் மகளிர்க்கும், பிணத்திற்குமான தொடர்பு சங்க காலம் தொட்டு நீடித்து வந்துள்ளது எனவும் கருதுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக