மனிதன் உயிர்வாழ மிக முக்கியமான ஒன்று இதயம். ஆரோக்கியமாக இதயத்தை பாதுகாத்தால் மட்டுமே நீண்ட நாட்கள் வாழ முடியும்.
இதயத்தில் பிரச்னை ஏற்படுவதற்கு காரணம் உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு, சர்க்கரை, தவறான உணவுப் பழக்க வழக்கங்கள், சமுதாய மாற்றங்கள், புகைப்பிடிக்கும் பழக்கம் மற்றும் குடிப்பழக்கம்.
சீரான உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்க வழக்கங்களின் மூலம் ஆரோக்கியமான இதயத்தை பெறலாம்.
ஓட்ஸ்
ஓட்ஸ் என்றதுமே நமது நினைவுக்கு வருவது உடல் எடையை குறைக்கும் என்பதுவே, அதுமட்டுமின்றி இதயத்திற்கும் சிறந்த உணவாக உள்ளது.
இதய நோயாளிகள் இதனை காலை உணவிற்கு எடுத்துக் கொள்ளலாம், கொலஸ்ட்ராலின் அளவை குறைப்பதுடன், சீரான எனர்ஜியையும் தருகிறது.
ஆலிவ் ஆயில்
இதய நோயாளிகளுக்கு மிகச்சிறந்த உணவு என்றால் அது ஆலிவ் ஆயில் தான், கெட்ட கொலஸ்ட்ராலை அழிப்பதுடன் இதயத்தை சூப்பராக வைத்துக் கொள்கிறது.
இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் இதயம் சீராக இயங்க உதவுவதால், இதனை தினமும் சமையலுக்கு பயன்படுத்தி வரலாம்.
தானியங்கள்
கோதுமை, பார்லி, பருப்பு மற்றும் தானிய வகைகள் இதயத்திற்கு சிறந்த உணவாகும்.
இவைகளில் உள்ள நார்ச் சத்துக்கள், ஆன்டி ஆக்சிடன்டுகள் மற்றும் மெக்னீசியம் இதயத்தின் சீரான இயக்கத்திற்கு உதவுகிறது.
தக்காளி
தக்காளியில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிம சத்துக்கள் இதய நோய்கள் மற்றும் இரத்த திட்டுகளின் பாதிப்பை குறைக்கிறது.
பாதாம் மற்றும் வால்நட்
பாதாமில் உள்ள ஒமோகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் இ, நார்ச் சத்துக்கள் மற்றும் மக்னீசியம் இதய நோய்களை குறைப்பதுடன், மிகச் சிறப்பான இயக்கத்திற்கு உதவுகிறது.
எனவே பழச் சாலட்டுகள், மில்க் ஷேக்குகள் மற்றும் வெறுமனே கூட சாப்பிடலாம்.
இதேபோன்று வால்நட்டில் உள்ள வைட்டமின் இ, நார்ச் சத்துக்கள், மெக்னீசியம் இருப்பதால் இதயத்திற்கு சிறந்த உணவாகும்.
பச்சை இலைக் காய்கறிகள்
பச்சை இலைக் காய்கறிகளில் குறைந்தளவே கொழுப்பு மற்றும் கலோரிகள் இருப்பதால் ஆரோக்கியமான இதயத்திற்கு சிறந்த உணவுகளாக உள்ளன.
இவைகளில் ஏதேனும் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இதய நோய்களிலிருந்து விடுபடலாம்.
ஆப்பிள்
இதயத்திற்கு சிறந்த உணவுகளில் ஒன்று ஆப்பிள், இதில் இயற்கையாகவே அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இதய நோய்களை குறைக்கிறது.
சால்மன்
சால்மன் மீனில் நிறைந்துள்ள அதிக புரோட்டின் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது, மேலும் இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
|
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
புதன், 3 டிசம்பர், 2014
இதயத்தை பாதுகாக்கும் சூப்பர் உணவுகள்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக