தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 6 டிசம்பர், 2014

கட்டுமாணப் பணிகளுக்கு தயாராகும் இராட்சத வானியல் தொலைகாட்டி!

வானியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக European Extremely Large Telescope அல்லது E-ELT எனும் இராட்சத வானியல் தொலைகாட்டிக்கான கட்டுமாணப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
பிரித்தானியா, ஸ்பெயின், ஜேர்மன், இத்தாலி உட்பட 15 நாடுகள் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் இந்த திட்டத்திற்கு சுமார் 1.083 பில்லியன் பவுண்ட்ஸ் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
2012ம் ஆண்டின் இறுதியில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 74 மீற்றர்கள் உயரமும், 84 மீற்றர்கள் விட்டமும் கொண்ட இந்த தொலைகாட்டியானது உலகிலேயே மிகப்பெரிய வானியல் தொலைகாட்டியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இதன் கட்டுமாணப் பணிகள் 2024ம் ஆண்டளவில் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக