''இந்துவாக பிறந்தேன், ஆனால் இந்துவாக சாகமாட்டேன்" என்று தோழர் அம்பேத்கர் அறிவித்தபோது அது இந்து வெறுப்பு அடையாள அரசியலாக இல்லை. சமத்துவம் மறுக்கும் இந்து சமூகத்திற்கு எதிரான ஒடுக்கப்பட்டோரின் கலகக் குரலாக வெடித்து இந்து சமூகத்தின் ஆணிவேரை அசைத்துப் பார்த்தது. அதனால் இந்து எதிர்ப்பு / தன் சாதிக்கான போராட்ட தலைவராக குறுகிய வட்டத்தில் காட்டப்பட்ட அம்பேத்கரை அவரது ஆய்வுகளிலிருந்தே அவரை மிகச் சிறந்த சிந்தனையாளராக நம்மால் பார்க்க முடியும். அதுவரை அம்பேத்கரின் மர்ம மரணத்தைப் போல் அவரது சிந்தனைகளையும் இந்து சமூகத்தில் புரட்டிப் பேசும் அரசியலை செய்து கொண்டே இருக்கும்.
- தமிழச்சி
06/12/2014

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக